Categories: latest news

இந்தியன் 2, கல்கி 2898AD படங்களோட… ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

ஓடிடியின் அருமையை உலகிற்கு உரக்கக்சொன்ன பெருமை கொரோனா காலகட்டத்தையே சேரும். அந்த 3 ஆண்டுகளில் அப்படி ஒரு வளர்ச்சியை எட்டியது ஓடிடி தளங்கள். கொரோனாவுக்கு முன்னர் ஓடிடி ரிலீஸ் என்பது சாட்டிலைட் உரிமை போலத்தான் இருந்தது.

ஆனால் கொரோனா காலத்தில் நெட் பேக் போட்டு குடும்பம், குடும்பமாக மக்கள் குதூகலத்துடன் படம் பார்க்க அந்த டைமில் லாபம் பார்த்த நிறுவனம் என ஓடிடி தளங்களை நாம் தாராளமாக சொல்லலாம்.

விளைவாக இப்போது எல்லாம் ஓடிடி தளங்களை மனதில் வைத்துத்தான் படங்களுக்கான பூஜையே போடப்படுகின்றன. பார்க்கிங் தொல்லை, பாப்கார்ன் தொல்லை என எந்த தொல்லையும் இல்லாமல் நாம் விரும்புகிற நேரத்தில் படம் பார்க்கலாம் என்பது தான் இதன் மிகப்பெரிய பிளஸ்.

இதனால் இப்போது எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஓடிடி தளங்களும் புதிய படங்களை ரிலீஸ் செய்து மக்களை கவர்கின்றன. இப்படி புகழ் வாய்ந்த ஓடிடி தளத்தில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் கல்கி 2898AD மற்றும் இந்தியன் 2 படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.

அதன்படி ஆகஸ்ட் மாதம் அமேசான் பிரைமில் கல்கி 2898AD படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தியன் 2 படமும் வெளியாகவுள்ளன. இதேபோல மலையாள படமான டர்போ சோனி லைவில் வெளியாகவிருக்கிறது.

கல்கி 2898AD, இந்தியன் 2 என இரண்டு படங்களிலுமே கமல் நடித்திருக்கிறார். அதோடு அடுத்ததாக கல்கி 2898AD படத்தின் 2-வது பாகம் மற்றும் இந்தியன் படத்தின் 3-வது பாகம் ஆகியவை கமல் நடிப்பில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

15 hours ago