‘ரோஜா’ படத்தில் முதலில் இசையமைக்க இருந்தவர்! அட கமலுக்கு நெருக்கமானவர் ஆச்சே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:55  )

இசைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரகுமான். இளையராஜாவுக்கு பிறகு இசையில் ஒரு பெரும் புரட்சியை செய்தவர் ஏ ஆர் ரகுமான். தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்தியாவில் இருந்து முதன் முதலில் ஆஸ்கார் விருதை பெற்ற ஒரு சாதனையாளராக இவர் விளங்கினார்.

அதுவும் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ஏ ஆர் ரகுமான். 2009 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக தான் ஆஸ்கார் விருதுகளை வாங்கி இருந்தார். முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் திரும்ப பார்க்க வைத்தார்.

ஆனால் ரோஜா படத்தில் முதலில் இசையை அமைக்க இருந்தவர் இசையமைப்பாளர் மகேஷ். அவர் நம்மவர் படத்திற்காக இசையமைத்திருக்கிறார். கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் .மணிரத்தினம் மகேசை அணுகிய போது அந்த நேரத்தில் மகேஷுக்கு ஏகப்பட்ட படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இருந்ததனால் ரோஜா படத்தில் இசையமைக்க முடியாது என சொல்லிவிட்டாராம்.

அதன் பிறகு மணிரத்தினத்தின் சகோதரி ஏ ஆர் ரகுமானை ஒரு முறை மணிரத்தினத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதன் பிறகு மணிரத்தினத்தை தன்னுடைய ஸ்டூடியோவிற்கு வருமாறு அழைத்தாராம் ரஹ்மான். அழைப்பை ஏற்று மணிரத்தினம் அங்கு செல்ல அங்கு ஏற்கனவே இசையமைத்திருந்த பல ஆல்பம் பாடல்களை போட்டு காண்பித்தாராம் ஏ ஆர் ரகுமான் .அதை எல்லாம் கேட்டுவிட்டு ரோஜா படத்தில் இவர்தான் இசையமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம். அதன் பிறகு தான் அந்தப் படத்தில் ரஹ்மான் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார்

Next Story