சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்பான்… மகள் பிரச்னையில் மீண்டும் வழக்கா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:58  )

Irfan: யூட்யூபர் இர்பான் தற்போது மீண்டும் தன்னுடைய மகள் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது வழக்கு எழுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் பிரபல யூட்யூபராக இருப்பவர் இர்பான். இவர் இர்பான்ஸ்வியூ என்ற சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சர்ச்சையில் சிக்குவது புதியது இல்லை. எப்போதும் நடக்கும் விஷயம் தான். உணவு ரிவியூ செய்த போது ஒரு ரெஸ்டாரெண்ட் விஷயமாக சிக்கினார்.

திருமணத்தின் போது ஒரு விபத்து என கதை தொடர்ந்தது. அடுத்ததாக, கர்ப்பமாக இருக்கும் போது பாலினத்தினை சிங்கப்பூரில் செக் செய்துவிட்டு அதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சை கிளப்பினார். அவர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து வழக்கு பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இர்பான் வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரியதை அடுத்து பிரச்னை ஓய்ந்தது. தற்போது மகள் பிறந்த வீடியோவை மீண்டும் இணையத்தில் இர்பான் வெளியிட்டு இருக்கிறார். அதில் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது போல காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதுதான் தற்போதைய சர்ச்சைக்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.

பொதுவாக மருத்துவ உபகரணங்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே தொட வேண்டும். இதில் இர்பான் இப்படி செய்வது சட்டரீதியாக குற்றம் என புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை பாயவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவ சங்கத்தில் இருந்து அந்த மருத்துவமனையிடமும், இர்பானிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறதாம். அதை தொடர்ந்து மற்ற நடவடிக்கைகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவை நீக்கவும் யூட்யூப் நிறுவனத்திடம் மருத்துவத்துறை கோரிக்கை வைத்துள்ளது.

Next Story