இன்று கமல் நடிப்பில் தக் லைப் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 38 வருடங்களுக்குப் பிறகு கமல் மணிரத்னம் காம்போவில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பற்றி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. படத்தின் கதையை பொறுத்த வரைக்கும் நிற்கதியாக இருக்கும் சிம்புவை ஒரு தந்தையாக தத்தெடுத்து வளர்க்கிறார் கமல் .
தன்னுடைய வலதுகையாக வைத்திருக்கிறார் . கமலின் பாதிப் பவரை சிம்புவுக்கு கொடுக்கிறார். அதனால் கமல் குடும்பத்திற்குள் ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. ஏனெனில் கமலுடைய இடம் ஒரு சின்ன பையனுக்கு எப்படி கொடுக்கலாம் என்ற வகையில் சலசலப்பு ஏற்படுகிறது. ட்ரெயினரில் கூட ஒரு டயலாக் வரும். இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு கூறுவார்.
இது என்ன மாதிரியான ஒரு பிரச்சினையை உருவாக்குகிறது .எங்க போய் முடிகிறது. இதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை .இதெல்லாம் மீறி படத்திற்கான எதிர்பார்ப்பு கமல் சிம்பு இவர்கள் தான். விண்வெளி நாயகனாக உண்மையிலேயே கமல் இந்த படத்தில் வருகிறார் என்றால் கண்டிப்பாக வருகிறார். கமலுடைய அறிமுகம் தியேட்டரில் பறக்கிறது.
குறிப்பாக ஏராளமான நடிகர்கள் இந்த படத்திற்குள் இருக்கின்றனர். சிம்புவை இவர்களுக்கு மத்தியில் சரியாக உட்கார வைத்திருக்கிறார் கமல் .இதையெல்லாம் தாண்டி கமல் படங்களில் அவர்தான் டாமினென்ட் ஆக இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தப் படத்தில் சிம்புவுக்கு தனக்கு இணையான ஒரு ஸ்பேசை கொடுத்திருக்கிறார் கமல். குறிப்பாக இந்த படம் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மாதிரி தான் எனக்கு தெரிந்தது.
ஒரு கேங்ஸ்டர் படம் தான் .பெரிய கதை எல்லாம் கொண்டு வரவில்லை. எங்க போய் கேங்ஸ்டர் திரைப்படத்தை எடுத்தாலும் அதனுடைய ஒன் லைன் இப்படித்தான் இருக்கும். அதை வைத்து ஸ்கிரீன் ப்ளேவில் மணிரத்னம் என்ன மேஜிக் செய்து இருக்கிறார் என்பது தான் பார்க்க வேண்டும். செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திலிருந்து மணிரத்தினம் இன்னும் வெளியே வரவில்லையா என்ற ஒரு சந்தேகத்தை கிளப்புகிறது.
சரி அவருடைய ஸ்கிரீன் ப்ளேவாக இருந்தாலும் கமல்ஹாசன் என்ற ஒரு மேஜிக் மேன் இருக்கிறார். இவ்வளவு காலம் சினிமாவில் ஊறிய ஒருவர். இப்பொழுது கூட ஆறு மாதம் ஏஐ கோர்ஸ் படித்து முடித்து இருக்கிறார். அவருடைய பங்களிப்பு எப்படி இருக்கிறது .படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக போகிறது. இரண்டாம் பாதியில் மிகவும் ஸ்லோவாக போகிறது. இன்னொரு பக்கம் ஏ ஆர் ரகுமானின் இசை. நல்ல ஒரு இசையை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அதை சரியான இடத்தில் பயன்படுத்தவில்லையோ என்ற ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது என படத்தைப் பற்றி செய்யாறு பாலு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…