Categories: latest news

10 படத்துல 3 படம் இந்த நடிகரோடதான்.. ஃபுல் ஃபார்மில் இருக்கும் ஐசரி கணேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனம் மூலம் ஏராளமான படங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. வரிசையாக பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 படங்களை தயாரிக்க போவதாக ஒரு பெரிய லிஸ்டையே வெளியிட்டிருக்கிறது.

அந்த பத்து படங்களையும் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கப் போகிறார்கள் என்பது முதற்கொண்டு வெளியாகியிருக்கிறது. சுந்தர். சி, கௌதம் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தோணி, அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, என். செல்லா அய்யாவு, மற்றும் கணேஷ் பாபு ஆகியோர்தான் ஐசரி கணேஷ் தயாரிக்க போகும் படங்களை இயக்கும் இயக்குனர்கள்.

இந்த நிலையில் இன்று ஒரு விழா மேடையில் ஐசரி கணேஷ் பேசும் போது ‘பத்துப் படங்களை தயாரிக்க போவதாக கூறியிருந்தேன். அதில் மூன்று படங்களை நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து தயாரிக்க போகிறேன்’ என்று கூறியிருக்கிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் விஷ்ணு விஷாலும் ஏற்கனவே படங்களை தயாரித்து வருகிறார்.

அதனால் அவருடன் இணைந்து ஐசரி கணேஷ் மூன்று படங்களை தயாரிக்க போகிறாராம். அதில் பேச்சுலர் இயக்குனர் சதீஷுடன் ஒரு படம், அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஒரு படம், செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி 2 படம் என மூன்று படங்களை ஐசரி கணேஷும் விஷ்ணு விஷாலும் சேர்ந்தே தயாரிக்க போவதாக ஐசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார்.

vishnu

இதில் அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரிக்க போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு வந்தன. ஆனால் ஐசரி கணேஷ் லிஸ்ட்டில் அஜித் படமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago