தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் பிரின்சஸ் நூர்ஜகான்... யார் படத்திலன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:49  )

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவர் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார். கங்குவா திரைப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளது. படத்தில் நடிகர் சூர்யா வரலாறு கெட்டப் மற்றும் இன்றைய இளைஞர் என்று 2 வேடங்களில் நடித்திருக்கின்றார்.

இப்படத்தின் டீசர் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மாதத்திலேயே படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சில பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போனது. இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கு மூன்று வாரங்கள் இருப்பதால் பட குழுவினர் தொடர்ந்து பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். சூர்யா கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படமும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சூர்யா 44 திரைப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 45 வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி இருந்தது. அதாவது இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கும் ஆர் ஜே பாலாஜி இயக்க இருக்கின்றார். படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கப்படும் என்று கூறப்படுகின்றது. தற்போது கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன்களில் சூர்யா ஈடுபட்டு வருவதால் அதனை முடித்துக் கொண்டு சூர்யா 45 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளைஞர்களின் தற்போதைய கனவு கன்னியாக இருக்கும் மிருணாள் தாக்கூர் நடிக்க இருக்கின்றார் என்று கூறப்படுகிறது. சீதாராம் திரைப்படத்தில் பிரின்சஸ் நூர்ஜகானாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட இவர் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமாகிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இது சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Next Story