Categories: latest news

யாருக்கும் ஆண்மையில்லை. சின்மயிக்கு நடந்தது துரோகம்!. பொங்கும் பிரபலம்!…

Chinmayi: அரசியலை போலவே சினிமாவில் ஒருவரை பிடிக்காவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள். அதாவது சினிமா உலகிலும் அரசியல் உண்டு. சினிமா துறைக்கு வரும் பெண்கள் பல வருடங்களாகவே பாலியல் தொல்லைகளை சந்தித்து வருகிறார்கள். வாய்ப்பு வேண்டுமெனில் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்பதுதான் கீவேர்ட். இதற்கு ஒப்புக்கொண்டால் வாய்ப்பு. இல்லையென்றால் வாய்ப்பு கிடைக்காது.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்தான் வாய்ப்பு என்றால் வாய்ப்பே தேவையில்லை என பல பெண்கள் சென்றுவிடுகிறார்கள். சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வாய்ப்புக்காகவும் வேறு வழியில்லாமல் சம்மதம் சொல்கிறார்கள். சினிமாவில் உள்ள எல்லா துறைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால், இதிலெல்லாம் சிக்காமல் சினிமாவில் நுழைந்து சாதித்து காட்டிய பெண்கள் பலரும் இருக்கிறார்கள்.

இப்போது பெண் இயக்குனர்கள் கூட வந்துவிட்டார்கள். ஆனால், பெண்கள் மீதான பாலியல் சீண்டல் என்பது இன்னமும் திரையுலகில் குறையவில்லை. சில வருடங்களுக்கு முன்பு பின்னணி பாடகி சின்மயி சிலர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் கூறி அதிர வைத்தார். அவரை தொடர்ந்து பல பெண்களும் தாங்களும் பிரச்சனைகளை சந்தித்ததாக தைரியமாக சமூகவலைத்தளங்களில் மீ டூ என்கிற ஹேஷ்டேக்கில் சொன்னார்கள்.

சினிமா உலகில் இருக்கும் பலரும் இதில் சிக்கினார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அதை மறுத்தார்கள். டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் மற்றும் நடிகர் ராதாரவி இதில் கோபமடைந்தார். எனவே, சின்மயி ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை என ஏதேதோ சப்பைக்கட்டு கட்டி சினிமயி சினிமாவில் பாடவும், பின்னணி குரல் பேசவும் தடை விதித்தார்.

இது நடந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுவரை அந்த தடை நீக்கப்படவில்லை. இந்நிலையில்தான் தக் லைப் பட புரமோஷன் விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் பலராலும் சிலாகிக்கப்பட்டது. அதோடு, இவ்வளவு இனிமையாக பாடும் சின்மயி மீதான தடையை நீக்க வேண்டும் என சின்மயிக்கு ஆதரவாக பலரும் கிளம்பினார்கள். இதுபற்றி ராதாரவியிடம் கேட்டதற்கு ‘சின்மயி பற்றி இப்போது பேசுவது வேஸ்ட்’ என நக்கலாக பதில் சொன்னார்.

இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘ என்னுடைய ஆதரவு சின்மயிக்குதான். அவங்களுக்கு தமிழ் திரைப்பட சங்கம் பண்ணது துரோகம். அநியாயம், அநீதி. அவங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் எதிர்க்காமல் இருக்கலாம். அவங்கள் மீதே தவறு சொல்லி அவங்களை வெளியே அனுப்பிட்டீங்க. நீங்கள் எல்லாம் ஆம்பளைகள்தான்?.. கோழைகளும் ஆண்மையற்ற ஆண்களும் சங்கத்தில் உட்கார்ந்து இருப்பதுதான் இதற்கு காரணம். தப்பு பண்ணிட்டு நல்லா இருக்காங்க. உண்மையை சொன்னவருக்கு இந்த தண்டனை’ என பொங்கியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago