Categories: latest news

ரெக்கார்ட் பண்றதுல தளபதிய மிஞ்ச முடியுமா?.. இப்பவே பல கோடி கல்லா கட்டிய ஜனநாயகன்…

JanaNayagan: தமிழ் சினிமாவில் தன்னுடைய கடைசி திரைப்படத்தில் நடிக்கும் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் எந்த படமும் செய்யாத சாதனையை செய்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்லா திரைப்படங்களுமே 500 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது. விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும் வசூலில் குறைவில்லை.

தொடர்ந்து தற்போது ஒப்புக்கொண்ட கடைசி திரைப்படத்தை முடித்துவிட்டு கட்சிக்குள் கவனம் செலுத்த இருக்கிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது. இப்படத்தை பிரபல இயக்குனரான ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார்.

இப்படத்தினை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. விஜயுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜி, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். படத்தின் வேலைகள் இதுவரை 50 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதலில் படத்தை தீபாவளி ரிலீஸ் ஆக இந்த ஆண்டு வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பிலேயே வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் வசூலை மிகப்பெரிய அளவில் உயர்ந்த திட்டமிட்டு அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை படக்குழு குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் விஜயின் அரசியல் பிரவேசிப்பிற்கு அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என அந்த நேரத்தில் இப்படம் வெளியானால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பை பெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை எந்த திரைப்படமும் விற்பனையாகாத மிகப்பெரிய தொகையில் ஜனநாயகன் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். 75 கோடி ரூபாயிற்கு விற்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago