கோட் திரைப்படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் இது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றார் போல் கதை. திரைக்கதையில் சில மாற்றங்களை வினோத் செய்திருக்கிறார். விஜய் தீவிர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான பல காட்சிகளும் படத்தில் இருக்கிறது. ஏற்கனவே தொண்டர்கள் மத்தியில் விஜய் செல்பி எடுப்பது போலவும், எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் ஸ்டைலில் கையில் சாட்டையோடு அவர் நிற்கும் போஸ்டர்களும் வெளியானது.
இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜயோடு மமிதா பைஜு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தில் வில்லனாக ஹிந்தி நடிகர் பாபு தியோல் நடித்திருக்கிறார். ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி உலகம் எங்கும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். பொதுவாகவே அவர் நடிக்கும் படங்களில் விஜய் ஒரு பாடல் பாடுவார். மற்ற பாடல்களை விட விஜய் பாடும் பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும். அந்த வகையில் இந்த படலும் எப்படி அமைந்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் ஜனநாயகன் ஃபஸ்ட் சிங்கிளுக்காக தீபாவளி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. வருகிற அக்டோபர் முதல் வாரமே அதாவது ஆயுத பூஜை பண்டிகையில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அதாவது தீபாவளிக்கு முன்பு விஜய் தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கப் போகிறார் என்பது உறுதியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…