Categories: Cinema News jananayagan songs latest cinema news latest news ஜனநாயகன் பாடல்கள் ஜனநாயகன் விஜய்

Jananayagan: தீபாவளிக்கு செம ட்ரீட் வைக்கும் தளபதி!.. விஜய் ஃபேன்ஸ் ரெடியா இருங்க!..

அரசியல்வாதியாக மாறிய விஜய்:

இப்போதெல்லாம் நடிகர் விஜய் பற்றிய அப்டேட் என்றாலே அது அவரின் அரசியல் தொடர்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். தற்போது முழுநேர அரசியல்வாதியாகவே அவர் மாறிவிட்டார்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் சந்திப்பு:

அரசியல் கட்சி தொடங்கினாலும் மக்களை சந்திக்காமல் அரசியல் தொடர்பான வேலைகளை பனையூரில் அலுவலகத்தில் இருந்து மட்டுமே செய்து வந்த விஜய் தற்போது மக்களை பார்க்க சுற்று பயணம் செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல அவர் திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று 15 முதல் 20 நிமிடங்கள் அவர் பேசி வருகிறார். விஜயின் அரசியல் நடவடிக்கை தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

#image_title

ஜனநாயகன் அப்டேட்:

கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்களே அதை மறந்து விட்டார்களா என தெரியவில்லை. ஏனெஎனில் அந்த படம் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களின் முழு கவனமும் விஜயின் சுற்றுப்பயணம் மீதே இருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்குதான் படம் ரிலீஸ் என்பதால் படம் தொடர்பான வேலைகளை மிகவும் பொறுமையாகவே செய்து வருகிறார்கள். இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் பாடியுள்ள பாடலைத்தான்தான் முதல் பாடலாக தீபாவளிக்கு வெளியிடப் போகிறார்கள். எனவே விஜய் ரசிகர்களுக்கு இது தீபாவளி இருந்தாக அமையும் என கணிக்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்