இறுதிக்கட்டத்தில் ஜனநாயகன்… இனி விஜய் ரசிகர்களுக்கு இது இல்லையே! வாட் புரோ!

JanaNayagan: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் விஜய். அவருடைய கடைசி சில படங்களில் அவரின் சம்பளம் மட்டுமே 50 கோடி அளவில் ஒவ்வொரு படத்துக்கும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. இந்த அளவில் ஜனநாயகன் படத்திற்கு அவர் சம்பளம் 275 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
கேரியரின் உச்சத்தில் இருக்கும் போது தன்னுடைய சினிமா வாழ்க்கையை உதறிவிட்டு அரசியலுக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், அவருடைய கடைசி படம் ஜனநாயகன் என்ற அறிவிப்பும் வந்தது.
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வந்தது. தற்போது படத்தின் 80 சதவீத படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம். விஜயின் காட்சிகள் இந்த மாதம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து விஜயின் பிறந்தநாளில் ஜனநாயகனின் சிங்கிள் அல்லது எதுவும் ஸ்பெஷல் வரும் என்பதால் படக்குழு அதற்கு தற்போதே உழைக்க தொடங்கிவிட்டனர். அனிருத்தும் தன்னுடைய இசையமைப்பு பணியில் இருக்கிறாராம்.
இந்த படத்தினை அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கும் நிலையில் அதற்குள் விஜயும் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுவதால் விஜய் ரசிகர்கள் இனிமேல் அவரின் ஷூட்டிங் காட்சிகளை பார்க்க முடியாது.
ஒன் லாஸ்ட் டைமாக இன்னும் ஒரு மாதத்திற்கு ஒரு சகாப்த்தின் நடிப்பு வாழ்க்கையே முடிய இருக்கிறது.அதையடுத்து வரும் எல்லாமே கடைசி முறை என்பதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.