போக்சோ கேஸில் உள்ள போனவருக்கு இந்த தியாகி பட்டம் தேவையா? வெளிவந்த ஜானி மாஸ்டரின் வீடியோ!..

Published on: November 7, 2024
---Advertisement---

JaniMaster: பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் ஜாமீனில் வெளிவந்து இருக்கும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட் திரைப்படங்களிலும் சமீபகாலமாக பிரபலமாக இருந்தவர் ஜானி மாஸ்டர். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றார். இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது அவருடைய உதவியாளர் பாலியல் வழக்கை கொடுத்தார்.

ஷூட்டிங்கில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் இருந்த போது தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கொடுத்தார். இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஜானி மீது நடவடிக்கை பாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் படங்களில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் அவர் தெலுங்கு திரையுலகத்தில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் போக்‌ஷோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட இருந்த தேசிய விருதும் ரத்து செய்யப்பட்டது. அந்த விழாவில் அவர் கலந்துக்கொள்ள பரோல் கிடைத்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் 37 நாட்களுக்கு பின்னர் ஜானி மாஸ்டர் வெளியில் வந்து இருக்கிறார். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கும் அவர் இந்த 37 நாட்களில் எங்களிடம் இருந்து நிறைய பறிக்கப்பட்டது.

எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகள் என்னை திரும்பி அழைத்து வந்தது. பல சமயங்களில் உண்மை மறைந்தாலும் அழியாது. அது ஒரு நாள் வெல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோ வைரலாகி இருக்கும் நிலையில் நீங்க என்ன தியாகியா? இப்படிதானே அவங்க வீட்டு பெண்ணையும் வளர்த்து இருப்பாங்க அப்போ தெரியலையா எனவும் கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment