இனிமேதான் என் ஆட்டம் ஆரம்பம்!.. ஜெயம் ரவியின் கையில் இவ்வளவு படங்களா!...
Jayam ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. முதல் படத்தின் பெயர் இவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்து கொண்டது. துவக்கத்தில் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.
பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். பெரிய ஹிட் கொடுப்பதில்லை என்றாலும் ஜெயம் ரவியை வைத்து படமெடுத்தால் லாபம் நிச்சயம் என்பதால் பல தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டனர். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ஜெயம் ரவி.
இந்த படம் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்திற்கு 4 தேசிய விருதுகளும் கிடைத்தது. அதேநேரம், கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான அகிலன், இறைவன், சைரன் போன்ற படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்த படங்களையெல்லாம் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தயாரித்திருந்தார்.
சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார் ஜெயம் ரவி. அதற்கு பல காரணங்களையும் சொல்லி இருக்கிறார். ஆனால், விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை என ஆர்த்தி சொல்லி இருக்கிறார். இது எங்கு போய் முடியும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
ஒருபக்கம், மும்பையில் தனது புதிய அலுவலகத்தை திறந்திருக்கிறார் ஜெயம் ரவி. இனிமேல், அங்கிருந்தவாறே அவர் புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மும்பை போன நேரமோ என்னவோ, 3 புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஜெயம் ரவி.
இதில் 2 படங்களை டீமாண்டி காலணி மற்றும் இரட்டை தலை ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் ஒரு படத்தை ஷங்கரின் உதவியாளர் ஒருவர் இயக்கவுள்ளார். மற்ற 2 படங்களுக்கும் இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் வேலை நடந்து வருகிறதாம்.