மனைவியுடனான ஃபோட்டோ! அப்பவே மறைமுகமா சொல்லியிருக்காருப்பா ஜெயம் ரவி

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:48  )

தமிழ் சினிமாவில் தனக்கான தேடுதலை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் ஜெயம் ரவி. அடுத்தடுத்து பல நல்ல இயக்குனர்களை தேடி தனக்கான வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு வருகிறார். இத்தனை நாளாக தன் மாமியாரின் தயாரிப்பிலேயே நடித்து அந்த படங்கள் சரியான வரவேற்பை பெறாமல் ஜெயம் ரவியின் ஒரு சில படங்கள் தோல்வியிலேயே முடிந்தது.

இதனால் ஜெயம் ரவி ஒரு ராசியில்லாத நடிகர் என்றும் அவரால் தனியாக ஜெயிக்க முடியாது என்றெல்லாம் பல விமர்சனங்கள் வந்தன. இதற்கிடையில் அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையும் சூடு பிடிக்க ஒட்டுமொத்தமாக மனைவியை பிரிய முடிவு செய்து விவாகரத்து வரை சென்றார். இப்போது ஜெயம் ரவி தனியாகத்தான் இருக்கிறார்.

மனைவியிடமிருந்து தன்னுடைய உடமைகளை மீட்டுத்தரும் படியும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதுமட்டுமில்லாமல் தன் மகன்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். இது சம்பந்தமான வழக்குத்தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு மத்தியில் ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மனைவி ஆர்த்தி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

அதனால் அடுத்த கட்ட நகர்வு என்னாவாக இருக்கப் போகிறது என தெரியவில்லை. இந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் பல புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தன. இருவரும் ஜோடியாக பல வித போஸ்களில் மிகவும் ரொமாண்டிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

அதை பார்த்து பொறாமைப்படாதவர்களே இல்லை. அதில் ஒரு புகைப்படம் தாஜ்மஹால் அருகில் இருவரும் சேர்ந்து பல புகைப்படங்களை எடுத்திருப்பார்கள். மனைவியுடனான பிரச்சினைக்கு முன்பாக தொகுப்பாளர் ஒருவர் அந்த புகைப்படத்தை காட்டி ‘இதை இன்ஸ்டாவில் பதிவிட்டீர்களே? பதிவிட்டதும் மிகவும் வைரலானது. டியர் ஆர்த்தினும் போட்டிருந்தீங்க’ என கேட்டார்.

அதற்கு ஜெயம் ரவி ‘ நானா இன்ஸ்டாவில் போட்டேன். என் இன்ஸ்டா அக்கவுண்டில் நான் எதையும் போஸ்ட் போட்டதே இல்லை. எல்லாம் என் மனைவிதான். அவங்களா போட்டுப்பாங்க’ என கூறியதும் அந்த புகைப்படத்தில் உள்ள கமெண்டை நோட் பண்ணீங்களா? இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து படத்துல நடிச்சா சூப்பரா இருக்கும் என தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு ஜெயம் ரவி வீட்லதான் நடிச்சிட்டு இருக்கேன். சொல்லுமா.. இல்லமா.. நீ சொன்னா சரிதான்மானு.. இதுல படத்துலயுமா அவங்ககிட்ட நடிக்கனும் என பதில் கூறினார்.

Next Story