பொன்னியின் செல்வன் 3 எடுக்க போறாங்களா...? அட நம்ம அருண்மொழிவர்மனே சொல்லிட்டாரே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:36  )

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கின்ற நாவலை பலரும் படமாக்க பல முயற்சிகளை செய்தார்கள். ஆனால் அது முடியாத சூழலில் டிராமா பானியில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் ஒன்று மற்றும் இரண்டு என வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களை இயக்கி ஒட்டுமொத்தமாக 800 கோடி வரை வசூலை ஈட்டி மிரட்டி விட்டார் இயக்குனர் மணிரத்தினம்.

மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மட்டும் இல்லாமல் 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலக அளவில் இரண்டு படங்களும் சேர்த்து 800 கோடி வரை வசூல் செய்தது. இந்த திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியதேவனாக கார்த்திக், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்கள்.

இது மட்டும் இல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் முதல் பாகம் திரைக்கு வந்தது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு மற்றொரு பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் 70ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் ஒன்று பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெற்றி தோல்விகளை தாண்டி நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 3 விரைவில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த தகவலை நடிகர் ஜெயம்ரவி பகிர்ந்து இருக்கின்றார். நடிகர் ஜெயம் ரவி பிரதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது பொன்னியின் செல்வன் பாகம் 3 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது இந்த திரைப்படம் எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. என்னிடம் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்களுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை எத்தனை பாகங்களாக எடுத்தாலும் அதில் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று கூறியதாக அவர் பேசியிருந்தார். விரைவில் பொன்னியின் செல்வன் 3 தொடர்பான செய்திகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என கூறப்படுகிறது.

Next Story