படமும் பிளாப்!.. பணமும் போச்சி!.. பிரதர் ரிசல்ட்டில் அப்செட் ஆன ஜெயம் ரவி!..

Brother movie: ஜெயம் ரவிக்கு இது போதாத காலம் போல!.. கடந்த சில வருடங்களாகவே அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஓடவில்லை. கோமாளி படத்திற்கு பின் அவருகு வெற்றிப்படமே அமையவில்லை. இடையில் பொன்னியின் செல்வன் படம் மட்டும் வெற்றிப்படமாக அமைந்தது.
அகிலன், இறைவன், சைரன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து தனது மாமியாரின் தயாரிப்பில் நடித்து வந்தார். அந்த படங்கள் எல்லாம் லாபம் வந்ததாகவும், தனது மாமியார் தன்னிடம் நஷ்ட கணக்கு காட்டியதாகவும் சொன்னார் ஜெயம் ரவி.
அதோடு, தனது மனைவியுடன் சில பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிவதாகவும் அறிவித்தார். மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்தது ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னிடம் ஆலோசிக்காமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவரின் மனைவி ஆர்த்தி தெரிவித்தார்.
தற்போது மும்பையில் தனியாக அலுவலகம் துவங்கி தனது சினிமா தொடர்பான வேலைகளை செய்து வருகிறார் ஜெயம் ரவி. தற்போது புதிதாக பல படங்களிலும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அப்படி பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை என 3 படங்கள் உருவாகி வருகிறது.
இதில் பிரதர் படம் மட்டும் தீபாவளியை முன்னிட்டு கடந்த 31ம் தேதி வெளியானது. இந்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியிருந்தார். வழக்கமான நண்பர்கள், டாஸ்மாக் காட்சிகள் என படமெடுக்கும் ராஜேஷ் அதை விட்டுவிட்டு செண்டிமெண்ட்டாக இப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்திற்கு பெரிய புரமோஷன் செய்யப்படவில்லை. இதனால் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. அமரன் மற்றும் பிளடி பெக்கர் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இல்லாமல் போனது. எனவே, தற்போது பிரதர் வெளியான தியேட்டர்களில் அப்படம் தூக்கப்பட்டு துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் திரையிடப்பட்டு வருகிறது.
ஒருபக்கம் பிரதர் படத்தை வாங்கிய வினியோகஸ்தர் பட ரிலீசுக்கு முதல் நாள் இந்த படம் எனக்கு வேண்டாம். கொடுத்த அட்வான்ஸ் பணம் 23 கோடியை திருப்பி கொடுங்கள் என பிரச்சனை செய்துள்ளார். ஆனால், முழு பணத்தையும் அவருக்கு கொடுக்க முடியவில்லை. எனவே, படம் ரிலீஸாக முடியாத நிலை. எனவே, ஜெயம் ரவி 4 கோடி பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவி இருக்கிறார். அப்படி அவர் உதவி வெளியான பிரதர் படம் தியேட்டரில் ஓடவில்லை. எனவே, அப்செட்டில் இருக்கிறாராம் ஜெயம் ரவி.