டார்கெட் பண்ணி அடிக்குறாங்க!.. ரெட்ரோ, தக் லைப் தோல்விக்கு காரணம்!.. பொங்கிய பிரபலம்!..

Published on: August 8, 2025
---Advertisement---

Thug life: சினிமா நடிகர்கள் பொதுவானவர்கள். சாதி, மதம், இன, ரசிக வேறுபாடு இன்றி எல்லாரும் அவர்களின் படங்களை பார்ப்பார்கள். அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தனித்தனி ரசிகர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லா நடிகர்களின் படங்களையும் பார்த்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் ரஜினி கமல், போட்டி உருவானது.

அவர்கள் இருவரின் ரசிகர்களும் சண்டை போட்டு கொண்டார்கள். அதேநேரம் அப்போது பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் இல்லை. எப்போது டிவிட்டர் பிரபலமானதோ அப்போதே ரசிகர்கள் தங்களுக்கு பிடிக்காத நடிகர்களை திட்டுவதற்கு அந்த தளத்தை பயன்படுத்த துவங்கினார்கள்.

விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பல வருடங்களாக சண்டை போட்டு வருகிறார்கள். விஜய் படம் வெளியாகும் போது அஜித் ரசிகர்கள் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள். அதேபோல், அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்களும் இதையே செய்வார்கள். இப்போது இதை ரஜினி – விஜய் ரசிகர்களும் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் இப்படியெனில் அரசியல் காரணமாக ஒரு நடிகர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் அவர்களின் படங்கள் வெளியாகும்போது பலரும் வன்மத்தை கக்கி வருகிறார்கள்.

கமல் அரசியலுக்கு வந்த பின் அவரை ஒரு குரூப் குறி வைத்து அடிக்க துவங்கியது. அதேபோல், நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து சொன்னார். அதேபோல், அவரின் மனைவி ஜோதிகா ‘கோவில்களை போல பள்ளிகளையும் தூய்மையாக வைத்திருந்தால் நல்லது’ என சொன்னதால் இருவருமே ஒரு குருப்புக்கு எதிரியாக மாறினார். இதையடுத்து சூர்யா படம் வெளியாகும் போதெல்லாம் அவர்கள் படத்திற்கு எதிராக வன்மதை கக்கினார்கள்.

சூர்யாவின் கங்குவா படம் வெளியான போது ஒரு நாள் முழுவதும் முழுநேர வேலையாக வன்மத்தை கொட்டி தீர்த்தார்கள். ரஜினியின் வேட்டையன் படம் வந்தபோது விஜய் ரசிகர்கள் முழு வன்மத்தோடு அப்படத்திற்கு எதிராக டிவிட்டரில் டிரெண்டிங் செய்தார்கள். சமீபத்தின் கமலின் தக் லைப் படம் வந்தபோதும் ஒரு குரூப் இறங்கி அடித்தது.

இந்நிலையில், சினிமாவில் பல படங்களுக்கு வசனம் எழுதியவரும், எழுத்தாளருமான ஜெயமோகன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கங்குவா, ரெட்ரோ, தக் லைப் என பல சினிமாக்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றன. முதல் காட்சி முடிவதற்குள்ளேயே தக் லைப் படம் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் உருவாக்கப்பட்டு விட்டது. காரணம் கமல்ஹாசனின் அரசியல்தான். சூர்யாவுக்கும் இதே பிரச்சனைதான்’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment