Categories: Cinema News latest news

வேற வழியில்லாம டைவர்ஸ் பத்தி சொல்லிட்டேன்!.. பகீர் காரணம் சொன்ன ஜெயம் ரவி…

Jeyam Ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. அந்த படம் ஹிட் அடித்ததால் அவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்ந்து கொண்டது. துவக்கத்தில் அண்ணனின் இயக்கத்தில் மட்டுமே நடித்தவர் அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தனது கெரியரை வளர்த்துக்கொண்டார்.

ஒரு மினிமம் கேரண்டி ஹீரோவா இருக்கும் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு நெருக்கமானவர் குஷ்பு. சுஜாதாவின் மகள் ஆர்த்தி ஜெயம் ரவியை விரும்பியதால் ஒரு வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ஜெயம் ரவி அழைத்து சென்ற குஷ்பு கூடவே ஆர்த்தியையும் அழைத்து போனார். அங்கு இருவரையும் பழகவிட்டு ஜெயம் ரவியை காதல் வலையில் வீழ்த்தியதாக சொல்லப்பட்டது.

இருவரின் திருமண வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த போதுதான் சமீபத்தில் மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். வீட்டில் வேலைக்காரனுக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கு இல்லை என்றும், என்னை சந்தேகப்பட்டு எப்போதும் ஆர்த்தி கண்காணித்துக்கொண்டே இருந்தார் என்றும், என் செலவுக்கு கூட பணத்தை உதவியாளரிடம் கேட்க வேண்டிய நிலையும் எனவும் சொன்னார் ரவி.

மேலும், தனது மாமியார் சுஜாதா தயாரிப்பில் தான் நடித்த சில படங்கள் லாபம் என்றாலும் அதற்கெல்லாம் அவர் நஷ்ட கணக்கை காட்டியதாக புகார் சொன்னார். ஒருபக்கம், இந்த முடிவை தன்னுடன் ஆலோசிக்காமல் ரவி எடுத்ததாக ஆர்த்தி கூறினார். ஆனால், விவகாரத்து என்பதில் ஜெயம் ரவி உறுதியாக இருந்தார்.

இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது ரவி – ஆர்த்தி இருவரும் விவாகரத்து பற்றி நேரில் பேச வேண்டும் என சொல்லப்பட்டது. இதற்கு ஜெயம் ரவி வந்தபோது ஆர்த்தி வரவில்லை. இந்நிலையில், தனது விவகாரத்து பற்றி பேசியுள்ள ஜெயம் ரவி ஒரு புதிய தகவலை சொல்லி இருக்கிறார்.

எனது பிரிவை பற்றி வெளியில் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதுபற்றி வதந்திகள் பரவ துவங்கிவிட்டது. என்னுடைய படங்களும் அடுத்தடுத்து வெளியாகவிருந்தது. எனவே, வதந்திகள் பரவக்கூடாது என்றுதான் நானே சொல்லிவிட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

Published by
சிவா