Categories: Cinema News

ரஜினிகாந்துடன் மோதும் விஜய்யின் நண்பன்!.. அந்த ஹீரோயினுக்கு இந்த பேய் படமும் ஹிட் அடிக்குமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியானது. அந்த படம் வெளியாவதை முன்னிட்டு அதற்கு முன்னதாகவும் அந்த படம் வெளியான அடுத்த வாரமும் எந்த ஒரு பெரிய நடிகரின் தமிழ் படமும் வெளியாகவில்லை.

அதே போலத்தான் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் நண்பன் படத்தில் நடித்த நடிகர் ஜீவா தனது பிளாக் படத்தை வேட்டையன் படத்துக்குப் போட்டியாக இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார்.

இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணியம் இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜீவா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்த நிலையில், பிரியா பவானி சங்கருடன் அவர் இணைந்து நடித்துள்ள பேய் படமான பிளாக் திரைப்படம் வேட்டையன் படத்துக்குப் போட்டியாக வெளியாகிறது.

அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா திரைப்படமே ரஜினிகாந்த் படத்துடன் மோதினால் வசூல் ரீதியாக பயங்கர அடிவாங்குவோம் என நினைத்து நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் தேதியை மாற்றியமைத்தனர்.

ஆனால், தில்லாக ஜீவா ரஜினிகாந்த் படத்துடன் மோத உள்ள நிலையில், இந்த படம் ஹிட் அடிக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. நடிகை பிரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு வெளியான ரத்னம், இந்தியன் 2 படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

ஆனால், கடைசியாக அருள்நிதியுடன் இணைந்து அவர் நடித்த டிமாண்ட்டி காலனி 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த படமும் அவருக்கு கை கொடுக்குமா என்பதை காத்திருந்து காண்போம்.

Published by
ராம் சுதன்