இதெல்லாம் காட்சியா..? கௌதம் மேனனை கலாய்த்த ஜீவா… இப்படியா ஓபனா பேசுவீங்க
Jiiva: நடிகர் ஜீவா தன்னுடைய படங்களின் இயக்குனர்கள் குறித்து விமர்சித்திருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் மகன் தான் ஜீவா. தமிழ் சினிமாவிற்குள் உள்ளே வரும்போது அவருக்கு மிகப்பெரிய பின்னணி இருந்தது. இருந்தும் அவரால் ஒரு சில படங்களை மட்டுமே சூப்பர் ஹிட் படமாக கொடுக்க முடிந்தது.
தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வந்தாலும் நடிகர் ஜீவாவால் தன்னுடைய இடத்தை தக்க வைக்க முடியவில்லை. தற்போது அவர் நடிப்பில் பிளாக் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது ஜீவா ஈடுபட்டு இருக்கிறார்.
அப்பொழுது பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜீவா, தன்னுடைய முகமூடி மற்றும் நீதானே என் பொன்வசந்தம் படங்களின் இயக்குனர்களை விமர்சித்திருக்கிறார். முகமூடி படத்தில் இரண்டாவது பகுதி ரொம்பவே நீளமாக அமைந்திருந்தது. அதை சரி பண்ண இயக்குனருக்கு தொடர்ந்து கால் பண்ணினேன்.
ஆனால் மிஷ்கின் என்னிடம் ஃபோனில் கூட பேச தயாராக இல்லை. அதுபோலவே கெளதம் வாசுதேவ் மேனன் படத்திலும் இரண்டாம் பகுதியில் தேவையே இல்லாமல் சில காட்சிகள் இடம் பெற்றது. டப்பிங் பேசும்போது கூட தயவு செஞ்சு அதை ஓட விடுங்க அப்புறம் பேசுறேன் என சொல்லும் நிலையில் இருந்தேன்.
அவரிடமும் குறிப்பிட்ட ஏழு நிமிட காட்சிகளை எடுக்க கூறினேன். ஆனால் அவரோ இது என்னுடைய கிரியேஷன் என்ன ப்ரோ என என்னிடமே கேள்வி கேட்டார். அதனால் நானும் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
பிளாக் திரைப்படத்திற்காக தன்னுடைய திரைப்படங்களை ஜீவா இதுபோல குறைத்து பேசுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதை இந்த நேரத்தில் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடம் இருந்து வருகிறது.