தனுஷ்-sk நட்பு ஆரம்பம் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். என்னதான் தனுஷ் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தி இருந்தாலும் இன்று தனுஷை விட சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகமாக உள்ளது. ஏற்றி விட்டவரையே எட்டி உதைத்த கதையாக இருக்கிறது தனுஷ்-சிவகார்த்திகேயன் story.
விஜய் டிவியில் reality show வில் தன்னுடைய காமெடி சேட்டைகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து entertain செய்து கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். இவரின் அதீத திறமை சின்னத்திரையோடு முடிந்து விடக்கூடாது வெள்ளித் திரையில் ஹீரோவாக வேண்டும் என்று நினைத்த தனுஷ், அவருக்காக 3 திரைப்படத்தில் காமெடியன் கதாபாத்திரம் கொடுத்து திரைத் துறையில் ஒரு அறிமுகம் கொடுத்தார்.
அதன் பிறகு தன்னுடைய wonderbar நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ’எதிர்நீச்சல்’ படத்தை தயாரித்தார். அந்த படம் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து காமெடி திரைப்படங்களாக நடித்து தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.
இன்று சிவகார்த்திகேயன் முதல் ஐந்து நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து முன்னிலையில் இருக்கிறார். சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் தனுஷ் உடனான cold war கடந்த 10 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதைப்பற்றி மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில்,
தனுஷ்-சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கான காரணம் :
”cine industry-யில் என்ன பிரச்சனை நடந்தாலும் தனுஷ்தான் காரணம் என்று கூறுகிறார்கள். மறுபுறம் அவர் 24 மணி நேரமும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு busy யாக இருக்கும் நபருக்கு முதலில் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு நேரமே இருக்காது. அதனால் சம்பந்தமே இல்லாத விஷயங்களில் தனுஷை சேர்த்து விடும் பொழுது கட்டாயமாக அவருக்கு கோபம் வரும்”.
”அதன் வெளிபாடு தான் ’இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் அவரின் மேனேஜர் ஆக்ரோசமாக பேசிவிட்டார். எனக்கு தெரிந்தவரை தனுஷின் எதிரிகள் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இவர்கள்தான். இன்னும் ஒருத்தர் சிம்புவாக இருக்கக்கூடும் என்று எனக்கு தோன்றுகிறது. Beep song காலகட்டத்தில் அனிருத்துக்கும் தனுஷுக்கும் சின்ன மன வருத்தம் இருந்தது”.
தனுஷின் கோபம் :
”மற்றபடி அவர் தனுஷின் எதிரிகள் லிஸ்டில் வர மாட்டார். தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சம்பள விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. நான் அறிமுகப்படுத்திய பையன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சம்பளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாரே? அதுவும் என்னிடமே இவ்வளவு கேட்கிறாரே.. என்று தனுஷுக்கு ஒரு கோபம் இருந்திருக்கலாம்”.
”ஒருமுறை தனுஷ் என்னை சந்தித்தபோது அவரே சொன்னார். சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு ஒன்டர் பார் நிறுவனம் இல்லை சார் என்று சொன்னார். அதேபோல நானும் தனுஷிடம் ’நீங்கள் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளத்திற்கும் தற்பொழுது வாங்கும் சம்பளத்திற்கும் வித்தியாசம் இருக்கு அப்படி இருக்கும்போது அவரும் கேட்பதில் தவறில்லை’ என்று சொன்னேன். அவர் சிரிச்சுக்கிட்டே சமாளித்து விட்டார்”.
”இருந்தாலும் இந்த பிரச்சனையை இதோடு விட்டிருக்கலாம். ஆனால் IT wing வைத்து அடிப்பது எல்லாம் தவறு. சிவகார்த்திகேயன் நிச்சயமாக அப்படி செய்து கொண்டிருக்கிறார். கன்னித்தீவு போல இந்த பிரச்சனை போய்க்கொண்டே தான் இருக்கிறது. எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது”. என்று கூறியுள்ளார்
