Categories: Cinema News latest news

மகள் பட்டமளிப்பு போட்டோவில் இருந்து சூர்யாவை நீக்கிய ஜோதிகா… இது என்ன புது பிரச்னையா இருக்கே?

Surya: சூர்யாவின் மகள் தியா பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்து இருந்த நடிகை ஜோதிகா திடீரென நீக்கி இருக்கும் தகவலால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் பெண் தியா சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்து இருக்கிறார்.

விரைவில் சவுத் கலிபோர்னியாவில் பட்டப்படிப்பு படிக்க செல்ல இருப்பதால் அவரின் மகள் தியா பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில் குடும்பத்துடன் பங்கேற்ற நடிகை ஜோதிகா, விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

படம் வைரலான நிலையில் அந்த புகைப்படங்களில், நடிகர் சூர்யாவின் மீசை மற்றும் தாடி லுக், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் வெற்றி படமான சிங்கம் திரைப்படங்களிலேயே தான் இதே மாதிரியான மீசை மற்றும் தாடியுடன் வந்திருந்ததால், இது ‘சிங்கம் 4’க்கு ஆயத்தம் என்றே பலர் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் குறிப்பிட்ட புகைப்படத்தை ஜோதிகா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருப்பதால் இந்த சந்தேகம் மேலும் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி மேலும் சந்தேகங்களை தூண்டியிருக்கிறது.

இது ரசிகர்களிடையே, “சிங்கம் 4 உருவாகும் வாய்ப்பு உறுதியாக இருக்கிறதா?” என்ற ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இந்த வரிசை திரைப்படங்களை இயக்கிய ஹரி, “வலுவான கதைக்கரு இருந்தால்தான் சிங்கம் 4 தயாரிப்பில் இறங்குவேன்” என ஏற்கனவே கூறியிருந்தார்.

தற்போது சூர்யா இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, வெங்கி அட்லூரியுடன் அவரது அடுத்த படம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில், சிங்கம் மீசை புகைப்படம் நீக்கப்பட்டு இருப்பதால் ‘சிங்கம் 4’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Published by
ராம் சுதன்