Categories: latest news

என் பையனுக்கு ஹிந்தியே பிடிக்காது!.. நானும் சூர்யாவும்.. கொளுத்திப்போட்ட ஜோதிகா!….

Actress Jyotika: கடந்த சில நாட்களாகவே பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போனாலே இந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகளை நிறைய பார்க்க முடிகிறது. தமிழகத்திற்கும் இந்திக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். தேசிய மொழியான ஹிந்தியை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என பாஜக அரசு நினைக்கிறது.

மும்மொழிக் கொள்கை: ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் என இரண்டு பயிற்று மொழிகள் அரசு பள்ளிகளில் இருக்க மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களும் ஹிந்தி படிக்க வேண்டும் என்கிற நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், எந்த மொழியென்றாலும் அதை கற்றுக்கொள்வது என்பவது அவர்களின் உரிமை. எதையும் திணிக்கக் கூடாது என்பது ஆளும் அரசு மற்றும் பலரின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

குறிப்பாக மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்கவில்லை என்றால் கல்வி தொடர்பான நிதியை கொடுக்கமாட்டோம் என மத்திய அமைச்சரே சொல்ல தமிழகத்தில் பலரும் கொந்தளித்துவிட்டார்கள். டிவிட்டர், ஃபேஸ்புக் என எங்கு போனாலும் இந்திக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஜோதிகா: ஆனால், ஹிந்தியை கற்றுக்கொள்வது நல்லதுதான். அப்போதுதான் வட இந்தியா பக்கம் போனால் தமிழர்களால் சமாளிக்க முடியும். ஏனெனில் வட இந்தியர்களுக்கு ஹிந்தி தெரியாது எனவும் சிலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில்தான், நடிகை ஜோதிகா கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். அவரின் தாய் மொழியே ஹிந்திதான். ஆனால், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘என் மகள் நன்றாக ஹிந்தி பேசுவாள். ஆனால, என் மகனுக்கு ஹிந்தி பிடிக்காது. ‘ஹிந்தி நஹி அம்மா’ன்னு சொல்லிடுவான். நானும், சூர்யாவும் அதிகமாக தமிழில்தான் பேசிக்கொள்கிறோம்’ என சொல்லியிருக்கிறார்.

கல்வி திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதை சூர்யா எதிர்த்து பேசினார். மேலும், கோவிலை போல பள்ளிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என ஒரு மேடையில் ஜோதிகா பேசியதையும் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இந்நிலையில்தான் ‘என் மகனுக்கே ஹிந்தி பிடிக்காது’ என சொல்லியிருக்கிறார் ஜோதிகா. சூர்யாவும், ஜோதிகாவும் இப்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

9 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago