யாருக்கிட்டயும் சிக்காத சிங்கப்பெண்.. பாலசந்தர்கிட்டயே வாலாட்டிய பெப்சி உமா
சன் டிவியில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற தொகுப்பாளினியாக இருந்தவர் பெப்சி உமா. ஹலோ நான் உங்கள் பெப்சி உமா பேசுறேன் என எனது இனிமையான குரல் மூலம் அந்த நிகழ்ச்சியை அவர் ஆரம்பிப்பதில் இருந்து முடியும் வரை நம் வீட்டின் அக்காவாக அண்ணியாக மிகவும் நெருக்கமான ஒரு தோழியாகவே நம் கண் முன் வந்து நிற்பார் .
அவர் பேசும் விதம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. குழந்தைத்தனமான பேச்சு, அழகான முகத்தோற்றம் என ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பை பெற்றார் பெப்சி உமா .இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை அறிந்து வெள்ளித்திரையில் பல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது .ரஜினியின் ஒரு படத்தில் கூட அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பெப்சி மாவை தேடி வந்தது.
ஆனால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதைப்போல ஹிந்தியிலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அப்பொழுதும் அவர் வேண்டாம் என மறுத்துவிட்டார். தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என பெப்சி உமாவின் வீட்டின் கதவை தட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் என்னால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
அதற்கு காரணம் நடிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லாதது மட்டும்தான் .இத்தனை முன்னணி பிரபலங்கள் அழைத்தும் அவர் நடிக்க மறுத்ததற்கு காரணம் ஆர்வம் இல்லாதது மட்டும்தானா என இன்னொரு கோணத்திலும் ஆராய ஆரம்பித்தனர். ஆனால் திட்டவட்டமாக எனக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமே கிடையாது என கூறினார் பெப்சி உமா. ஒரு முறை கே. பாலச்சந்தர் கூட பெப்சி உமாவை பார்த்து உனக்கு ஏன் அவ்வளவு திமிரா ?நடிக்க முடியாதுன்னு சொல்ற என கேட்டாராம்.
ஆனால் அவரிடமும் இந்த பதிலை தான் கூறியிருக்கிறார் பெப்சி உமா. ஆனால் ரசிகர்கள் 15 வருடங்களாக பார்த்து பழகி விரும்பிய ஒரு முகத்தை வெள்ளி திரையிலும் பார்க்க முடியாதா என இப்பொழுது வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பெப்சி உமாவுக்கு இன்று வரை அதிகமாக ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள் .ஆனால் அவர் ஒரே குறிக்கோளாக சினிமாவில் நடிக்க மாட்டேன் என இன்றுவரை அடம்பிடித்து வருகிறார்.