250 படம் நடிச்சு கட்டிய கோட்டை.. ஒரே படத்தால் சுக்கு நூறாக்கிய பேரன்! நடிகர்களுக்கு ராஜன் வேண்டுகோள்

by ராம் சுதன் |

சிவாஜி வீடு ஜப்தி: சமீபத்தில் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி சிவாஜியின் வீடு ஜப்தி செய்யப்பட்டுள்ளது என்பதுதான். கலையுலகின் வாரிசு, கலைத்தாய் ஈன்றெடுத்த புதல்வன், நடிப்பின் திலகம் என எத்தனையோ பெயர்களை கொடுத்துக் கொண்டே இருக்கலாம். ஏழையாக பிறந்து நாடகங்களில் நடித்து புகழ்பெற்று பின் நடிகராக மாறியவர் சிவாஜி கணேசன்.

சிவாஜியா? கலைஞரா? ; ஆரம்பத்தில் சிவாஜியா கலைஞரா என்றுதா கேட்பார்கள். ஏனெனில் கலைஞரின் வசனத்தை பல படங்களில் பேசி கலைஞரின் கைவண்ணத்தை இந்த ஊரறிய செய்தவர் சிவாஜி. அதை போல் சிவாஜியின் நடிப்பால் அந்த வசனத்திற்கு உயிர் வந்தது. அதனால் இருவரையும் தனித்தனியாக பிரித்துவிட முடியாது. அந்தளவுக்கு சிவாஜியும் கலைஞரும் நண்பர்களாகவும் இருந்தார்கள்.

250 படம்: சினிமாவில் 250 படங்களுக்கும் மேல் நடித்து உலகளவில் புகழ்பெற்றவர் சிவாஜி. சிவாஜி இல்லம் என்றாலே சென்னையில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. வெள்ளை மாளிகை மாதிரி அவருடைய வீட்டை பல பேர் வெளியூரிலிருந்து வந்து பார்த்து விட்டு சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட புகழ்பெற்ற வீடு இன்று ஏலம் போகும் நிலைமைக்கு வந்திருக்கிறது. இது தமிழ் சினிமாவிற்கே வெட்ககேடு என்று சொல்லலாம்.

கே ராஜன் ஆவேசம்: சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ஒரு படத்தை தயாரிப்பதற்காக ஒரு நிறுவனத்திடம் 3.50 கோடி கடனாக பெற்றிருக்கிறார். ஆனால் படமும் எடுக்கவில்லை. கடைசியில் அந்த பணம் வட்டியுடன் ஏறி 9 கோடி வரை வந்திருக்கிறது. அதை கொடுக்க முடியாத நிலையில்தான் சிவாஜியின் வீடு இன்று நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது. இதை திரையுலகினர் பல பேருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் கே ராஜன் இதை பற்றி கூறும் போது சினிமாவில் நடிப்புக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி. அவரது வீட்டிற்கு இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது. அதனால் நடிகர்கள் ஒன்று சேர்ந்து சிவாஜிக்காக எப்படியாவது அந்த வீட்டை மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகோளை விடுக்கிறேன். பிரபு இப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் கமலிடம் வேண்டுகோளாக கேட்டால் கமல் கண்டிப்பாக செய்வார்.

அதை போல் விஜய், அஜித், ரஜினி என நடிகர்கள் ஒன்று சேர்ந்து இதை செய்ய வேண்டும் என கேராஜன் கூறியிருக்கிறார்.சிவாஜி வீட்டில் சொத்து பிரச்சினை இருப்பது எனக்கு தெரியாது. ஆனால் சிவாஜிக்காக நடிகர்கள் ஒன்று சேர்ந்து அவரது வீட்டை காப்பாற்ற வழி செய்ய வேண்டும் என கே. ராஜன் கூறியிருக்கிறார்.

Next Story