Kaithi2: கார்த்தி நடிப்பில் இரண்டாம் பாகமாக உருவாக இருந்த கைதி2 தற்போது ஆட்டம் கண்டு இருப்பதாகவும் இதனால் எல்சியூ நிலைமை கவலைக்கிடமாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கு இயக்கப்படும் எல்லா படமுமே சூப்பர்ஹிட் அடிக்கும். அப்படி ஒரு இயக்குனராக இருந்தவர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் இருந்தே அவருடைய படங்கள் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது.
அப்படி அவர் தொடங்கிய மாநகரம், கைதி லோகேஷின் கேரியரையே உச்சிக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து, மாஸ்டர், லியோ, விக்ரம் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
இந்த வரவேற்பால் அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கூலி எனப் பெயர் வைக்கப்பட்ட அப்படம் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் 1000 கோடி வசூல் குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எல்சியூவை சம்மந்தப்படுத்தாமல் எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் தரப்பு கோரிக்கை வைத்தது. அதன் காரணமாகவும் முதல் புது கதையாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு லோகேஷ் ஏமாற்றமே கொடுத்தார். இதனால் அவரின் கேரியரும் ஆட்டம் கண்டது.
அமீர்கானுடனான படம் கைவிடப்பட்டது. அதிலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கப்பட இருக்கும் படத்தின் இயக்குனராக லோகேஷை ஒப்பந்தம் செய்ய சூப்பர்ஸ்டார் தரப்பு அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்களாம்.
இதனால் தன்னுடைய அருண் மாதேஸ்வரன் படத்தில் நடித்துவிட்டு எல்சியூ பக்கம் தாவ முடிவெடுத்தார். அதன் முடிவாக முதலில் கைதி இரண்டாம் பாகத்தினை இயக்க முடிவெடுத்தார். ஆனால் தற்போது அப்படமும் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருவருக்குமான கதை பிரச்னை மட்டுமல்லாமல் சம்பளமும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறதாம். இதனால் கைதி 2 படம் கைவிடப்படும் என்ற நிலைக்கு வந்துள்ளதாம். அப்படி நடந்தால் எல்சியூவிற்கே முட்டுக்கட்டை விழும் என்றும் கூறப்படுகிறது.
