மீண்டும் சூர்யா ஏஆர் முருகதாஸா? அங்கதான் டிவிஸ்ட் இருக்கு.. இத யாரும் எதிர்பார்க்கல

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:18  )

தீனா படத்தின் மூலம் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியவர் ஏஆர் முருகதாஸ். இயக்குனராக மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவருடைய படங்களை பொறுத்த வரைக்கும் சமூகப் பிரச்சினைகளில் ஆக்சன் கலந்த படங்களை இயக்குவதின் மூலம் மிகவும் பிரபலமானார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். ரட்சகன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த முருகதாஸ் தீனா படத்தின் மூலம் தான் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார்.

அது மட்டுமல்ல தீனா படத்திற்கு முன்பு குஷி படத்திலும் பணியாற்றி இருக்கிறார். அவருடைய முதல் பாலிவுட் திரைப்படமான கஜினி திரைப்படத்தை அதே பெயரில் தமிழில் எடுத்து தமிழிலும் சூப்பர் ஹிட் ஆக்கினார் முருகதாஸ். உள்நாட்டில் மட்டும் 100 கோடி வசூலித்த முதல் பாலிவுட் திரைப்படமாக இந்தி கஜினி திரைப்படம் அமைந்தது.

அதன் பிறகு விஜயை வைத்து துப்பாக்கி என்ற ஒரு ஆக்சன் திரில்லர் படத்தை இயக்கினார். இது உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 100 கோடி வசூலித்த இரண்டாவது தமிழ் திரைப்படமாக மாறியது. அதனை தொடர்ந்து சர்கார், தர்பார் என விஜய் ரஜினியை வைத்து படத்தை எடுத்து போதிய வரவேற்பை பெறாததால் மொத்தமாக ஃபீல்டு டவுட் ஆனார் முருகதாஸ்.

அதன் பிறகு தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்தார். அதுவும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இப்படி தமிழ் சினிமா பக்கமே காணாமல் போன முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் கோலிவுட்டில் அவரை பார்க்க முடிகிறது.

சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீது பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பிசியாக இருப்பதால் முருகதாஸ் இயக்கும் படத்திற்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கிறார்.

இந்தக்கிடையில் சூர்யாவுடன் பேச்சு வார்த்தையில் முருகதாஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயனுக்கு பிறகு சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அது கண்டிப்பாக கஜினி 2 ஆக தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தை தான் இப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story