ஷாருக்கானால் மணிரத்னம் பட வாய்ப்பை இழந்த முக்கிய நடிகை.. எந்த படம் தெரியுமா?

by ராம் சுதன் |

உயிரே படத்தில் மணீஷா கொய்ராலாவுக்கு முன் கஜோலைத்தான் நடிக்க வைக்க நினைத்தாராம் மணிரத்னம். ஆனால், அந்த வாய்ப்பு கஜோலுக்கு கைநழுவிப் போனதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு.

ஷாரூக்கான் - கஜோல் ஜோடி நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம்தான் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே. அந்த நேரத்தில் பாலிவுட்டின் டாப் ஜோடியக ஷாரூக்கும் கஜோலும் கொண்டாடப்பட்டனர். ராஜீவ் மேனன் இயக்கத்தில் மின்சாரக் கனவு படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகியிருந்தார் கஜோல்.

பிரபுதேவா ஜோடியாக தமிழ்நாட்டிலும் கஜோல் பெயர் ரீச்சாகியிருந்தது. அந்த நேரத்தில் தமிழ் - ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ஒரு படத்தை எடுக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். இந்தியில் தில்சே எனவும் தமிழில் உயிரே எனவும் பெயரிடப்பட்ட அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படத்தில் ஷாரூக்கு ஜோடியாக கஜோலை நடிக்க வைக்கவே நினைத்தாராம் மணிரத்னம். இதுதொடர்பாக பேசுவதற்காக கஜோலுக்கு போன் செய்திருக்கிறார் மணிரத்னம். அந்த நேரத்தில், ஷாரூக்கான் இப்படி அடிக்கடி போன் செய்து குரலை மாற்றி பேசி கஜோலிடம் வம்பிழுப்பதுண்டாம். மணிரத்னம் போன் பண்ணியபோதும் ஷாரூக்தான் கலாய்க்கிறார் என்று நினைத்து, காமெடி பண்ணாதீங்க ஷாரூக் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டாராம். இதையடுத்தே, உயிரே படத்தில் ஹீரோயினாக மணீஷா கொய்ரலாவைக் கொண்டுவந்திருக்கிறார் மணிரத்னம்.

Next Story