தடபுடலாக நடந்த தாணுவின் பேரன் திருமணம்!.. அடேங்கப்பா இவ்ளோ பிரபலங்கள் வந்துருக்காங்களே!..

Published on: August 8, 2025
---Advertisement---

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஏ.என். ஆதித்யன் மற்றும் டாக்டர் ப்ரித்திகா பாலாஜி ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்றது. நேற்று எழும்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல அரசியல் மற்றும் திரை பிரபலங்களில் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

எஸ். தாணு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ் திரையுலகில் “கலைப்புலி” என்று அழைக்கப்படுகிறார். தனது தயாரிப்பு நிறுவனங்களான வி கிரியேசன்ஸ் மற்றும் கலைப்புலி பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

எஸ். தாணு திரைப்படத் துறையில் விளம்பர வடிவமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, 1985ஆம் ஆண்டு வெளியான யார்? என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து நல்லவன், அசுரன், கபாலி, தெறி, விசாரணை, வேலைக்காரன், நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தாணு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு “சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தை முதலில் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாணு, கலா என்பரை திருமணம் செய்துக்கொண்டார், இவர்களுக்கு கலாபிரபு என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இதில் கலா பிரபு சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில், தாணுவின் மூத்த பேரனான ஏ.என். ஆதித்யன் என்பவருக்கு தான இன்று காலை திருமணம் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திக்கேயன், பிரசாந்த், தியாகராஜன், பார்த்திபன், வெற்றிமாறன், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, நாசர், மிஸ்கின், சூர்யா, சிபி சத்யராஜ், ஷோபா சந்திரசேகர், ரம்பா, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment