‘தெறி’ பட சமயத்தில் அட்லீ சொன்ன ஒரு வார்த்தை! இப்ப வரைக்கும் ஓஹோனு இருக்கேன்.. பூரிப்பில் தாணு
இன்று இந்திய சினிமாவில் அட்லீ ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி இருக்கிறார். அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது விஜயை வைத்து அவர் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்ததும் ஒரு காரணமாகும். ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ முதல் படத்திலேயே அவருடைய திறமையை இந்த சினிமாவில் நிரூபித்தார்.
அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், கத்தி என அடுத்தடுத்த பக்கா ஆக்சன் கலந்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை விஜயை வைத்து கொடுத்ததன் மூலம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகவே மாறி இருந்தார்.
இந்த நான்கு படங்களுக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் வெளியாகவில்லை. திடீரென பாலிவுட்டில் களமிறங்கினார் அட்லீ. ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற ஒரு பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தை உருவாக்கி அந்தப் படத்தின் மூலமும் இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று அங்கு ஆயிரம் கோடி வசூலை அள்ளித்தந்த ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிய அட்லி என்ற ஒரு பெருமையையும் பெற்றிருக்கிறார். அதிலிருந்து பாலிவுட்டில் அவரை பட்டுக்கம்பளம் போல் வரவேற்க தயாராகி விட்டார்கள். இந்த நிலையில் அட்லீயைப் பற்றி கலைப்புலி எஸ் தாணு ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
ஒரு சமயம் விஜயின் மேனேஜராக இருந்த ஒருவர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு தொலைபேசி மூலமாக அழைத்து உங்களை சார் மனோரமா வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார் .உங்களை பார்க்க வேண்டுமாம் எனக் கூறினாராம். அவர் சொன்ன மாதிரியே விஜயை பார்க்க கலைப்புலி தாணு அங்கு செல்ல அவரிடம் விஜய் 'நான் ஒரு கதை கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கிறது. அட்லீ தான் இயக்குனர். நீங்களும் போய் அந்த கதையை கேளுங்கள்' என சொல்லி அட்லீயிடம் அனுப்பி வைத்தாராம்.
அட்லி முதல் பாதி வரைக்கும் கதை சொல்ல தாணுவுக்கு கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என நினைத்துக் கொண்டாராம். இரண்டாம் பாகத்தை தொடர்ந்த போது' வேண்டாம் மறுநாள் நான் கேட்கிறேன்' என சொன்னாராம் .அதன் பிறகு அட்லீ தாணுவிடம் கண்டிப்பாக இந்த படம் உங்களை வேறொரு உச்சத்திற்கு கொண்டு செல்லும் என கூறினாராம்.இதைப் பற்றி கூறிய கலைப்புலி தாணு அட்லி அன்று சொன்னதைப் போல நான் தயாரித்த படங்களில் தெறி படம் தான் என்னை ஒரு பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது என கூறினார்.