Categories: Cinema News latest news

தனி ஃபிளைட் கேட்கிறாங்க!.. கலாநிதி மாறன் சொன்னது அந்த 2 பேரையா?..

Coolie:சன் பிக்சர்ஸ் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கலாநிதி மாறன். ரஜினியின் நடிப்பில் உருவான எந்திரன், பேட்டை, ஜெயிலர், அண்ணத்தே போன்ற படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்களும் இவர்களுடைய தயாரிப்புதான்.

அதுமட்டுமல்லாமல் அஜித், விஜய், தனுஷ், விஷால் என பல முன்னனி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தது சன் பிக்சர்ஸ். இவர்கள் தயாரிப்பில் உருவான தனுஷ், நித்யாமேன்னன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அண்ணத்தே படமும் இவர்களுடைய தயாரிப்பில் வெளிவந்த படங்கள் ஆகும். கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான், லோகேஷ் கனகராஜ், அனிருத், கலாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கலாநிதி மாறன், ஒரு படம் நடித்து வெற்றி பெற்றுவிட்டால் அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், தனி விமானம் கேட்கிறார்கள். ஆனால் ரஜினியோ எதையும் எதிர்பார்ப்பதில்லை. மிகவும் எளிமையாக இருக்கிறார் என கலாநிதி மாறன் பேசினார். இந்நிலையில் அவர் சொன்ன அந்த தனி பிளைட் கேட்ட நடிகர் வேறு யாருமில்லை சிவகார்த்திகேயனும், நயன்தாராவும்தான் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Published by
சிவா