Categories: Cinema News latest news

என் அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை… நடந்தது இதுதான்… கல்பனாவின் மகள்…

Kalpana: பாடகி கல்பனா நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய மகள் இந்த விஷயம் குறித்து செய்தியாளர்களுக்கு கொடுத்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

ராஜ்கரண், மீனா நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் போடா போடா புண்ணாக்கு பாடலை பாடி தமிழில் அறிமுகமானவர் கல்பனா. தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கூடிய தமிழ் மற்றும் தெலுங்கில் 1500 க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

டிவி ஷோக்களிலும் கல்பனா கலந்து கொண்டு தற்போதுள்ள சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். இந்நிலையில் நேற்று அவரை தற்கொலை முயற்சி காரணமாக மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஐதராபாத்தில் இருக்கும் நிஜாம்பேட்டை அடுக்கு மாடி குடியிருப்பில் கல்பனா தங்கி இருக்கிறார். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இவர் வீடு திறக்கப்படவில்லை. நேற்று அங்கு வசிப்பவர்களின் மீட்டிங்கில் கலந்துக்கொள்ள அவர் வீட்டை தட்ட திறக்கப்படவில்லையாம்.

இதனால் காவல்துறைக்கு தகவல் தெரியப்பட்டு அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது கல்பனா படுக்கையில் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கல்பனாவின் மகள் கூறுகையில், என் அம்மா நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டனர். அவருக்கும் என் அப்பாவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் நலமுடன் தான் இருக்கின்றனர்.

அம்மாவிடன் உடல்நல பிரச்னையால் அவர் தூக்க மாத்திரை சாப்பிடுகிறார். அது ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அதனால் தான் மயக்கம் அடைந்தார். மற்றப்படி எந்த வித வதந்தியையும் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

Published by
ராம் சுதன்