ஒரே ஒரு பாட்டு.. உயிரை கொடுத்து ஆடிய அஜித்.. குட் பேட் அக்லி குறித்து கல்யாண் மாஸ்டர் பேட்டி

by ராம் சுதன் |

விஜய் மாதிரி டான்ஸில் பட்டையை கிளப்பா விட்டாலும் தன்னுடைய ஒரு பாடலில் ஐகானிக் ஸ்டெப் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அஜித். ஆலுமா டோலுமா படத்தில் ஒரு கையை மேலே தூக்கி விரலை ஆட்டுவது இன்று வரை அது அவருடைய ஒரு ஐகானிக் ஸ்டெப்பாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு படத்திலும் இந்த மாதிரியான ஒரு ஐகானிக் ஸ்டெப் உள்ள பாடல் இடம் பெற்று விடும் .

பொதுவாக அஜித்துக்கு டான்ஸ் என்ற அடிப்படையில் பெரும்பாலும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் கல்யாண் மாஸ்டர் .தீனா படத்தின் மூலமாகத்தான் கொரியோகிராபராக அறிமுகமானார். இந்த படத்தில் கல்யாண் மாஸ்டரை கொரியோகிராபராக மாற்றியது அஜித் தான். அவர் சொன்னதின் பெயரில்தான் கல்யாண் இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணி புரிந்தார்.

அதற்கு முன் கல்லூரி வாசல், உயிரோடு உயிராக போன்ற திரைப்படங்களில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்போது அஜித்துக்கும் கல்யாணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தீனா படத்திற்கு பிறகு பில்லா, வேதாளம் ,மங்காத்தா, விசுவாசம் போன்ற வரிசையாக அஜித்தின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார் கல்யாண்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திலும் அவர்தான் டான்ஸ் மாஸ்டர். ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய குட் பேட் அக்லி திரைப்படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு இவர் கொரியோகிராபராக பணிபுரிந்தாராம். ஆனால் அந்த பாடல் செம டிரெண்டாக போகிறது. ரசிகர்கள் அனைவரும் கொண்டாட கூடிய ஒரு பாடலாக இருக்கும். நன்றாக ஆடி இருக்கிறார் அஜித்.

உயிரை கொடுத்து ஆடி இருக்கிறார். அந்த பாடலில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபரன்ஸ் வரும் என்பதைப் போல சூப்பரான அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கல்யாண் மாஸ்டர். ஏற்கனவே குட் பேட் அக்லி படமே அஜித் நடித்த பல படங்களின் ரெஃபரன்ஸ் மாதிரி தான் இருக்கிறது. பில்லா, தீனா, மங்காத்தா, வேதாளம் போன்ற படங்களின் ரெஃபரன்ஸ் இந்த படத்தில் இருப்பதாக தெரிகிறது. அதைப்போல கல்யாண் மாஸ்டர் கொரியோகிராபராக அமைத்த பாடலிலும் அந்த மாதிரி ஒரு ரெஃபரன்ஸ் இருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story