கைதி 2 படத்தில் இவங்களா?.. இந்த தடவை LCU சும்மா தாறுமாறா இருக்கப்போகுது..!

by ramya suresh |
கைதி 2 படத்தில் இவங்களா?.. இந்த தடவை LCU சும்மா தாறுமாறா இருக்கப்போகுது..!
X

Director Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு கைதி என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஒரே நாளில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் இப்படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதற்கு அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

தன்னுடைய 3வது திரைப்படத்திலேயே நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ் அதனை அடுத்து கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருக்கின்றது.

ரஜினியுடன் கூலி: நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

தென்னிந்தியாவை சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். நடிகர் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், சுருதிஹாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கியதாக பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைதி 2 திரைப்படம்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை முடித்த பிறகு கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போகின்றார் என்கின்ற தகவல் வெளியாகி வருகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படத்திற்கான பணிகள் துவங்கி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியே கிடையாது.

ஆனால் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கின்றது. இது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து நடிகர் கமல்ஹாசனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றாராம்.

மேலும் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய சூர்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story