இளையராஜாவின் பயோபிக்... டாட்டா காட்டிய உலகநாயகன்... வெளியான புதிய அப்டேட்..!
தமிழ் சினிமாவில் மிக பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கின்றார். இவர் கடைசியாக ராயன் என்கின்ற திரைப்படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இவரை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்று விட்டது என்றுதான் கூற வேண்டும்.
இதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து அசத்தி வந்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் சாதித்து காட்டி விட்டார். இதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தையும் இவரே இயக்கி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தெலுங்கு இயக்குனருடன் சேர்ந்து குபேரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.
இப்படி தொடர்ந்து பல படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இப்படத்தின் பூஜை கடந்த மார்ச் 20ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் அவர் முதன்முறை சென்னைக்கு வரும்போது கையில் ஆர்மேனிய பெட்டியுடன் வந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படமானது மிகவும் வைரலானது. மேலும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் தற்போது நடிகர் கமலஹாசன் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஷ் இயக்க இருப்பதாகவும், எஸ் ராமகிருஷ்ணன் ஸ்கிரீன் ப்ளே எழுத இருப்பதாகவும் தகவல் உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாக புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து கமலஹாசன் அவர்கள் வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.