இனி கமல் படங்களில் நோ ரொமான்ஸ். .. நோ லிப்லாக்... ஆண்டவரே உங்களுக்கே இந்த நிலைமையா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:15  )

ஒரு கால கட்டத்தில் உலகநாயகன் கமல் படங்கள் என்றாலே 'உதட்டு முத்தம்' என்று அழைக்கப்படும் லிப் லாக் பெரிதாகப் பேசப்படும். ஆனால் சமீபகாலமாக இது குறைந்துள்ளது. விக்ரம் படத்தில் அவருக்கு ஜோடியே கிடையாது. ஆக்ஷன் மட்டும் தான் என்றாகி விட்டது. இந்தியன் 2 படம் எதுவுமே இல்லாமல் சொதப்பி விட்டது. தக்லைஃப் படத்தில் எப்படி என்று தெரியவில்லை.

கமல் 'ஏஐ' டெக்னாலஜியைக் கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதையொட்டி அந்தப் படத்திற்கான புரொமோஷனுக்கு அமெரிக்கா செல்ல உள்ளதாம் படக்குழு. அந்த வகையில் தற்போது கமலைப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. என்னன்னு பார்க்கலாமா...

அஜீத் சில வருடங்களுக்கு முன் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல்ல படத்துல வந்தாரு. அதுக்கு ஒரு காரணமும் சொன்னாரு. வயதுக்கு ஏத்த கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னாரு. கமலும் இனி அப்படித்தானாம். இனிமே நடிக்கிற கேரக்டருக்கு நம்ம வயசுக்கு ஏற்ற கேரக்டர்ல தான் நடிக்கணும். இனி அந்த மாதிரி ஆட்டம் பாட்டம்னு இருக்காதாம். ரொமான்ஸ், லிப் லாக்கும் கிடையாதாம்.

யுஎஸ்ல இருந்து வந்ததுக்கு பிறகு அன்பறிவு படத்தில தான் நடிக்கப் போறாரு என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. பாபநாசம் படத்திலே கூட கவுதமி ஜோடி. விக்ரம் படத்துல ஜோடியே கிடையாதாம்.

அன்பறிவு இயக்கும் படமும் ஆக்ஷன் தான். ஏஐ வைத்து மருதநாயகத்தைக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற திட்டமும் கமலுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கமல் தக்லைஃப்புக்காக பெரிய லென்ஸை அறிமுகப்படுத்தி உள்ளார். கமல் எப்படி வந்தாலும் அது ரசனையைத் தான் தரும். அவர் ஒரு கலைஞானி என்பதால் அவருக்கு யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை என்கிறார் அவரது அபிமான ரசிகர்கள்.

Next Story