அப்போ அவங்க இல்லையா? ‘இந்தியன் 2’வில் உண்மையான ஹீரோயினே இவங்கதானாம்.. போட்டுடைத்த கமல்

by ராம் சுதன் |

வருகிற 12-ஆம் தேதி கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படமான இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கும் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாக இருக்கிறது. ஏழு வருடங்களைக் கடந்து பல பிரச்சினைகளுக்கு பிறகு இப்பொழுது தான் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதன் முதல் பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இக்கால அரசியல் சூழலுக்கு ஏற்ப இந்தியன் 2 திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு அரசியலை பேச இருக்கிறது என்பதை காண அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதுவும் இல்லாமல் கமலும் அரசியலில் இருப்பதால் அவருடைய அரசியல் பார்வை இந்த இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்க போகிறது என்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வரும் கமலிடம் இன்று ஒரு பத்திரிக்கையாளர் 'இந்த இந்தியன் 2 திரைப்படம் உங்களின் அரசியல் பயணத்திற்கு பயன்படுமா?' என்ற வகையில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த கமல் 'என்னுடைய அரசியலுக்கு மட்டும் அல்ல. நேர்மையான எந்த அரசியல்வாதிகளும் இந்த இந்தியன் 2 படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தனை நல்ல அரசியல் இந்த படம் பேசுகிறது. பேன் இந்தியன் படமா என கேட்கிறார்கள்.

படத்தின் கதாநாயகனே பான் இந்தியன் தான். அந்தக் கதையை பேன் இந்தியன் கதை. கதாநாயகி யாரும் இல்லையே எனக் கேட்டார்கள். பாரதமாதாதான் கதாநாயகி. ஒரு தாயுக்கும் மகனுக்கும் இடையிலான பாச கதையாக கூட இது இருக்கலாம். அத்தனை விஷயங்களும் இதில் இருக்கிறது.

ஒரு அரசியல் பற்றிய புரிதலும் உணர்வும் மக்கள் மத்தியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் எடுக்கப்பட்ட படம் தான் இது. எனது கட்சிக்கு மட்டுமல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஒரு நல்ல யோசனை சொல்லித் தரும் படமாக இந்தியன் 2 திரைப்படம் இருக்கும்' என கமல் கூறி இருக்கிறார்.

Next Story