Categories: latest news

அப்போ அவங்க இல்லையா? ‘இந்தியன் 2’வில் உண்மையான ஹீரோயினே இவங்கதானாம்.. போட்டுடைத்த கமல்

வருகிற 12-ஆம் தேதி கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படமான இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கும் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாக இருக்கிறது. ஏழு வருடங்களைக் கடந்து பல பிரச்சினைகளுக்கு பிறகு இப்பொழுது தான் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதன் முதல் பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இக்கால அரசியல் சூழலுக்கு ஏற்ப இந்தியன் 2 திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு அரசியலை பேச இருக்கிறது என்பதை காண அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதுவும் இல்லாமல் கமலும் அரசியலில் இருப்பதால் அவருடைய அரசியல் பார்வை இந்த இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்க போகிறது என்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வரும் கமலிடம் இன்று ஒரு பத்திரிக்கையாளர் ‘இந்த இந்தியன் 2 திரைப்படம் உங்களின் அரசியல் பயணத்திற்கு பயன்படுமா?’ என்ற வகையில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த கமல் ‘என்னுடைய அரசியலுக்கு மட்டும் அல்ல. நேர்மையான எந்த அரசியல்வாதிகளும் இந்த இந்தியன் 2 படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தனை நல்ல அரசியல் இந்த படம் பேசுகிறது. பேன் இந்தியன் படமா என கேட்கிறார்கள்.

படத்தின் கதாநாயகனே பான் இந்தியன் தான். அந்தக் கதையை பேன் இந்தியன் கதை. கதாநாயகி யாரும் இல்லையே எனக் கேட்டார்கள். பாரதமாதாதான் கதாநாயகி. ஒரு தாயுக்கும் மகனுக்கும் இடையிலான பாச கதையாக கூட இது இருக்கலாம். அத்தனை விஷயங்களும் இதில் இருக்கிறது.

ஒரு அரசியல் பற்றிய புரிதலும் உணர்வும் மக்கள் மத்தியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் எடுக்கப்பட்ட படம் தான் இது. எனது கட்சிக்கு மட்டுமல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஒரு நல்ல யோசனை சொல்லித் தரும் படமாக இந்தியன் 2 திரைப்படம் இருக்கும்’ என கமல் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago