எல்லாம் தெரிந்தும் வாய மூடி இருந்த கமல்! ‘இந்தியன் 2’ படத்தால் ஷங்கருக்கு வந்த கெட்ட பேரு
சில தினங்களுக்கு முன்பு அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் இந்தியன் 2. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இந்த படத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்திருந்தார்கள்.
ஏனெனில் இதனுடைய முதல் பாகம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது. அதுவும் அரசியலிலும் பொதுமக்களிடமும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய லஞ்ச ஊழலை அடிப்படையாகக் கொண்ட கதையை அடிப்படையாக வைத்து இந்தியன் படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டிருந்தது.
அதனால் அதனுடைய தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் எந்த அளவு ஒரு ஊழலை பேசப்போகிறது என்ற வகையில் அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியதா என்றால் இல்லை என்று தான் அனைவரின் பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறது.
அதிலும் சங்கர் கெரியரில் இந்தியன் 2 திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைந்த திரைப்படமாக அமைந்தது என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படத்தின் நீளமும் இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
அதனால் படத்தில் ஒரு 15 நிமிட காட்சிகளை வெட்டி எடுத்து இருப்பதாகவும் சமீபத்தில் தான் ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் நீளத்தை பற்றி முன்பே அறிந்திருந்தாராம் கமல். டப்பிங் பேசும்போது அவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது படம் மிக நீளமாக இருக்கிறது என்று.
அதனால் இதை ஷங்கரிடம் சொல்லாமல் தயாரிப்பாளர் லைக்காவிடமும் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடமும் மட்டுமே சொல்லி இருக்கிறார். அவர் மட்டும் இல்லை. அனிருத்தம் படத்தின் நீளத்தைப் பற்றி முன்பே அறிந்து லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் தான் சொல்லியிருந்தாராம். இப்படி படத்தில் பணிபுரிந்த முக்கிய கலைஞர்கள் சங்கரிடம் இதை தெரிவிக்கவே இல்லையாம். கடைசியில் மக்கள் சொல்லித்தான் அவருக்கே தெரிந்திருக்கிறது.
படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர் படம் மிகவும் நீளமாக இருக்கிறது என்று சொன்னதின் பெயரில் தான் கடைசியில் இந்த முடிவை சங்கர் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தில் ஷங்கருக்கு ஒரு கெட்ட பெயர் தான் வந்திருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.