ஒன்லி ஒன் ஹவர்!..ஆஸ்கர் நாயகனையே அசரவைத்த உலகநாயகன்!.. தக் லைப் அப்டேட்!..

by ராம் சுதன் |

கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர். சினிமாவில் பன்முக திறமை கொண்ட வெகு சிலர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர்.

அதனால் எல்லாவற்றிலும் அவருக்கு அனுபவம் அதிகம். அதனால்தான் அப்போதே பேசும் படம், ராஜ பார்வை போன்ற படங்களை எடுத்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் காலை மடித்து நடிக்கும்போது அவரின் வயது 35. நாயகன் படத்தில் வாலிப வயது மற்றும் முதியவர் வேடத்தில் நடித்த போது அவரின் வயது 33 மட்டுமே.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 வேடங்களில் கலக்கிய போது அவரின் வயது 36 மட்டுமே. சினிமாவில் அவ்வளவு குறைவான வயதில் பல சாதனைகளையும் படைத்தது கமல் மட்டுமே. அவர் எழுதி நடித்த அபூர்வ சகோதரர்கள், மகாநதி, தேவர் மகன், விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக இருக்கிறது.

இடையில் சில வருடங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்த கமல் விக்ரம் ஹிட்டுக்கு பின் மீண்டும் பிசியான நடிகராக மாறிவிட்டார். ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். இந்த படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

கல்கி என்கிற பேன் இண்டியா படத்திலும் நடித்தார். இந்த படத்தில் கமலின் தோற்றம் பலராலும் பாராட்டை பெற்றது. மேலும், பல வருடங்களுக்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு டியூனை கமலுக்கு அனுப்பி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்,. தொழில்முறை பாடலாசிரியர்கள் கூட ரஹ்மானின் இசைக்கு பாடலை எழுத சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், கமலோ ஒரு மணி நேரத்தில் பாடல் வரிகளை எழுதி அனுப்பி அசர வைத்துவிட்டாராம்.

Next Story