அமரன் படத்துக்கு கமல் தயாரிப்பாளரே இல்லையா?!.. என்னப்பா சொல்றீங்க!....

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:40  )

Amaran: நடிகர் கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்கிற தயாரிப்பு நிறுவனம் துவங்கி அவர் நடிப்பில் வெளியான பல படங்களை தயாரித்திருக்கிறார். அதோடு, மற்ற நடிகர், நடிகைகள வைத்தும் சில படங்களை தயாரித்திருக்கிறார். இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ராஜபார்வை. 1981ம் வருடம் வெளியான இப்படம் கமலின் 100வது திரைப்படமாகும்.

அதன்பின் விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, குருதிப்புனல், ஹே ராம், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபம், தூங்கவனம் உள்ளிட்ட பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு நல்ல வசூலை கொடுத்தது.

அந்த படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படம் துவங்கப்பட்டது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதை இது. சிவகார்த்திகேயன் முதன் முதலாக இராணுவ வீரராக நடித்திருக்கிறார்.

தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. நேற்று ஒரு நாளில் உலகம் முழுவதும் இப்படம் 42.3 கோடியை வசூல் செய்திருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் கமல்ஹாசன் இல்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி மகேந்திரன் என்பவர்தான் கடந்த சில வருடங்களாக கமலுடன் இணைந்து புதிய படங்களை தயாரித்து வருகிறார். அவர்தான் அமரன் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் எனவும், ராஜ்கமல் நிறுவனத்தின் பேனரில் இந்த படத்தை அவர் தயாரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே, அமரன் படத்தின் லாபம் முழுக்க அவருக்கே செல்லும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே 42.3 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக இப்படம் எப்படியும் மேலும் வசூலிக்கும் என நம்பப்படுகிறது.

Next Story