Amaran: அமரன் படத்தில் வேற ஹீரோ!. கமல் போட்ட கணக்கு!.. எஸ்.கே.உள்ளே வந்தது இப்படித்தான்!..
Amaran: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் அமரன். விக்ரம் படம் ஹிட்டுக்கு பின் ராஜ்கமல் சிம்புவை வைத்து ஒரு படமும், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும் அறிவித்தது. இதில், சிம்பு படம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் படம் டேக் ஆப் ஆனது.
இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்து தனது டீமை வழிநடத்தி தீவிரவாதிகள் பலரை சுட்டுக்கொன்ற முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது. தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களை சுட்டு கொன்றவர் முகுந்த் வரதராஜன். அந்த போரில் தீவிரவாதிகள் சுட்டதில் சில குண்டுகள் அவரின் உடலில் பாய்ந்து அவர் மரணமடைந்தார்.
அவர் எப்படி ராணுவத்தில் இணைந்தார்.. ராணுவ வீரராக அவர் எப்படி சிறப்பாக செயல்பட்டார்.. அவரின் திருமண வாழ்க்கை.. தீவிரவதிகளை ஒழிக்க அவர் என்னவெல்லாம் செய்தார் என முக்கிய நிகழ்வுகளை அமரன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் உண்மை சம்பவங்கள் என்பதால் படம் பார்க்கும் ரசிகர்கள் படம் முடிந்து நெகிழ்வோடும், கண்ணீரோடும் வெளியே வருகிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த 31ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியானது. இப்படத்தோடு, ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானது. இதில், அமரன் படத்திற்கே அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.
எனவே, டிக்கெட் முன்பதிவிலும் இப்படம் சாதனை படைத்தது. தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. 3 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த கதையை கேட்டதும் ஒரு புதுமுகத்தை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்றே கமல் சொல்லி இருக்கிறார்.
ஆனால், முகுந்த் வரதராஜன் மனைவியிடம் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது முகுந்த் தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தது தெரியவந்திருக்கிறது. எனவே, ஒரு தமிழ் நடிகரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என அவருக்கு தோன்றியது. அந்த கணமே அவருக்கு நினைவுக்கு வந்தது சிவகார்த்திகேயன்தானாம். சிவகார்த்திகேயனும் கதையை கேட்டு மிகவும் ஆர்வமாகி ஒரே நாளில் நடிக்க சம்மதித்துவிட்டாராம்.