Thuglife: கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தினை கர்நாடகாவில் வெளியிட திடீர் முடிவு எடுத்து செயல்படுத்தி இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இன்னும் 2 தினங்களே இருக்கிறது. படக்குழு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புரோமோஷன் பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
ஒரு மேடையில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததாக பேசி இருந்தார். அந்த விஷயம் சர்ச்சையாக வெடித்தது. கன்னட அமைப்பு கமல்ஹாசன் எப்படி அப்படி பேசலாம் என கண்டனம் தெரிவித்தனர். இதனால் தக் லைஃப் படத்தினை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது எனக் கோஷம் எழுந்தது.
கன்னட சினிமா சேம்பர் கண்டிப்பாக கமல்ஹாசன் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும். அப்படி அவர் கேட்கவில்லை என்றால் கண்டிப்பாக தக் லைஃபை இங்கு வெளியிட முடியாது எனவும் உத்தரவிட்டனர். ஆனால் கமலோ நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்?
நான் தப்பே செய்யாத போது, மன்னிப்பு கேட்பது உடன்பாடில்லை என ஓபனாக சொல்லி இருந்தார். முதலில் 2 நாள் கெடு கொடுத்த போது அவர் முடியாது என மறுத்தார். தற்போது மேலும் ஒரு 24 மணிநேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் கமலின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அதிரடியாக தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் மூலம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்.
அந்த மனுவில்,‘‘கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தினை தடை விதித்து இருப்பது சட்டத்திற்கு எதிரானது. அதனால் தடையை நீக்கி படத்தினை வெளியிட அனுமதி தரவும், திரையரங்குக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
இந்த மனு மீதா விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடக சினிமா சேம்பரும் இந்த விஷயத்தினை சட்டப்படியே எதிர்கொள்வோம். அவர் மன்னிப்பு வேண்டும் வரை கர்நாடகாவின் எந்த திரையரங்கிலும் கமலின் படத்தினை வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…