எழுதுனா எழுதிக்கோ.. ‘இந்தியன் 2’ படத்தை கலாய்த்த கங்கை அமரன்! மொத்தமா சாய்ச்சுப்புட்டாரு

தமிழ் சினிமாவில் ஒரு இசை அமைப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராக திரைப்பட இயக்குனராக என பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்தவர் கங்கை அமரன்.

இப்போது கூட சமீபத்தில் வெங்கட் பிரபு விஜய் கூட்டணியில் தயாராகி இருக்கும் கோட் திரைப்படத்தில் ஒரு பாடல் இவர் எழுதியிருக்கிறார். பாவலர் சகோதரர்கள் என தமிழ் திரை உலகில் வலம் வந்த இளையராஜா, கங்கை அமரன் ,வரதராஜன், பாஸ்கர் என முதலில் நாடகத் துறையில் கோலோச்சி இருந்தார்கள்.

அதன் பிறகு சினிமாவின் மீது உள்ள மோகத்தால் இளையராஜா கங்கை அமரன் ஆகிய இருவரும் சென்னை வந்து வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். இப்படி படிப்படியாக சிறு சிறு கச்சேரிகள் நடத்தி நாடகத்திலும் இசையமைத்து அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார்கள்.

சொல்லப்போனால் இளையராஜாவின் முழு வாழ்க்கையை பற்றி நன்கு அறிந்தவராக கங்கை அமரன் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் இளையராஜாவை பற்றி கங்கை அமரன் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இளையராஜாவிற்கு ஹிந்துஸ்தானி இசையும் கர்நாடிக் இசையும் நன்கு தெரியும் எனக் கூறி இருக்கிறார். அதோடு வெஸ்டர்ன் இசையும் நன்கு அறிந்தவர் என்றும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கங்கை அமரன். இந்த நிலையில் இளையராஜாவின் இசையையும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையையும் ஒப்பிட்டு பிரபல நடிகர் ராஜேஷ் கங்கை அமரனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

அதாவது இசையில் இளையராஜாவிற்கு 80 மார்க் கொடுத்தால் மெல்லிசை மன்னருக்கு 100 மார்க் கொடுக்கலாம். ஆனால் ரிரிக்கார்டிங்கில் மெல்லிசை மன்னருக்கு 80 மார்க்கு என்றால் இளையராஜாவுக்கு தான் 100 மார்க் என்று சொல்கிறார்களே. அது எப்படி என கேட்டிருந்தார்.

அதாவது ரி ரெக்கார்டிங்கில் விஸ்வநாதனை விட இளையராஜாவின் ரீ ரெக்கார்டிங் இசைதான் அதிக அளவு வரவேற்பை பெற்றது என்ற விதத்தில் இந்த கேள்வியை கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த கங்கை அமரன் விஸ்வநாதனுக்கு வெஸ்டர்ன் இசை தெரியவே தெரியாது என கூறினார்.

ஆனால் இளையராஜாவுக்கு அத்துபிடி. அவருடைய பெரும்பாலான படங்களில் ரி ரெக்கார்டிங்கில் வெஸ்டர்ன் இசை தான் இருக்கும். அதுவும் போக விஸ்வநாதன் இசையமைத்த படங்களை பார்த்தால் படம் முழுக்க ரீ ரெக்கார்டிங்கில் இசையாக தான் ஓடிக் கொண்டிருக்கும். இளையராஜா ரெக்கார்டிங் செய்த படத்தை பார்க்கும்போது எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு மட்டும்தான் செய்திருப்பார் என கூறினார்.

இதற்கு இடையில் இந்தியன் 2 திரைப்படத்தையும் விமர்சித்திருந்தார் கங்கை அமரன். அந்த படத்தில் பட முழுக்க ஒரே சத்தமாக தான் கேட்டுக் கொண்டிருந்தது. மெல்லிசை மன்னர் இசையமைத்தது போல என்ற வகையில் கூறினார். இதைக் கூறிவிட்டு இதை எழுதனும்னா எழுதிக்கோ. ஒரு இசையமைப்பாளரா நான் இப்படித்தான் சொல்ல முடியும் என்றும் கேமராவை பார்த்து கூறி இருந்தார்.

Related Articles
Next Story
Share it