கங்குவாக்கு சிறப்பு காட்சி!.. ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!.. நினைப்பது நடக்குமா?!..
Kanguva: சூர்யாவின் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் கங்குவா என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்க சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், ஸ்பானிஷ் மற்றும் ஃபிரென்ச் மொழிகளிலும் இப்படத்தை வெளியிடுகிறார்கள். அதோடு, இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. முதல் பாகம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இது ஒரு சரித்திர கதை கொண்ட திரைப்படமாகும். சூர்யா இதுவரை இப்படி ஒரு படத்தில் நடித்தது இல்லை. இந்த படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார் சூர்யா. இப்படத்தில் 80 சதவீத காட்சிகள் பல வருடங்களுக்கு முன் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கிறது.
பாலிவுட் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவருக்கும் இது ஒரு முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்து வருகிறார்கள். கங்குவா முதல் பாகம் 2 ஆயிரம் கோடியை வசூலிக்கும் என சொல்லி இருக்கிறார் ஞானவேல் ராஜா.
இதை பலரும் ட்ரோல் செய்தார்கள். இதுபற்றி கருத்து சொன்ன சூர்யா ‘பெரிய அளவில் கனவு காண்பதில் என்ன தவறு இருக்கிறது’ என சொல்லி இருக்கிறார். உலகம் முழுக்க இப்படத்தை வெளியிட்டு கல்லா கட்டிவிட வேண்டும் என குறியாக இருக்கிறார்கள். சூர்யாவும் பல இடங்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார்.
இந்நிலையில், படம் ரிலீஸாகும் 14ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு திரையிடப்படவுள்ளது. ஆனால், தமிழகத்திலும் அதிகாலை காட்சியை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர் தரப்பு அரசுக்கு மனு அளித்திருக்கிறது. ஆனால், 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.