வரலாற்று சம்பவங்களை தழுவி எடுக்கப்படுள்ள படம் கண்ணப்பா. மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார் என முக்கிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கண்ணப்பா திரைப்படத்தின் முக்கிய VFX காட்சிகள் அடங்கிய ஹார்ட் ட்ரைவ் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த முக்கிய VFX நிறுவனத்திடமிருந்து பெற்றுகொண்ட தயாரிப்பு நிறுவன ஊழியர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இது குறித்து கண்ணப்பா பட நிறுவனம் அளித்த புகாரின்பேரில் தெலங்கானா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
