Categories: Cinema News kantara 2 kantara 2 trailer latest cinema news latest news rishap shetty காந்தாரா ரிஷப் ஷெட்டி சினிமா செய்திகள்

Kantara 2: ‘காந்தாரா 2’ பார்க்க வர்றவங்களுக்கு இப்படியா? வேற என்னெல்லாம் சொல்ல போறாங்களோ?

Kantara 2:

ரிஷப் ஷெட்டி இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து பெரிய ஹைப்பை ஏற்படுத்திய திரைப்படம் காந்தாரா. அதுவரை கன்னட சினிமா பாதாளத்தில் கிடக்க காந்தாரா திரைப்படத்தின் மூலம் மீண்டும் கன்னட சினிமாவை உலகறிய செய்தவர் ரிஷப் ஷெட்டி. ஆன்மீகம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வணங்கும் தெய்வம் என இவற்றை அடிப்படையாக வைத்து அந்த படம் படமாக்கப்பட்டது.

காந்தாரா 2 டிரெய்லர்:

முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் யாரும் எதிர்பாராத சாதனையை பெற்றது காந்தாரா திரைப்படம். இந்த நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி எப்போது இந்த படம் திரைக்கு வரும் என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

காந்தாரா படத்தின் சிறப்புகள்:

  • பாரம்பரிய நம்பிக்கைகள், அரசாங்கத்தின் சட்டங்கள் மோதும் விதம் என சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது
  • நாட்டுப்புறக் கலை, கிராமிய இசை என இயல்பாகவே படம்பிடிக்கப்பட்டன.
  • பாரம்பரியக் கதையுடன் மாயாஜாலத்தையும் இந்தப் படம் ஒருங்கே காட்டியிருந்தது.

இப்படி ஒரு கண்டீசனா?:

அடுத்த வாரம் படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஹோம்பலே பிலிம்ஸ் சார்பாக வெளியிடப்பட்டதாக கூறும் ஒரு போஸ்டர் சோசியல் மீடியாக்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றது. அது ரசிகர்களிடையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த போஸ்டரில் காந்தாரா 2 படத்தை பார்க்க வருபவர்கள் மது அருந்தவோ புகை பிடிக்கவோ அசைவு உணவு சாப்பிடவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

kantara

இந்த ஒரு பதிவு பல்வேறு தரப்பினரிடம் விமர்சனத்திற்கு உள்ளானது. இதைப் பற்றி இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி சரியான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதாவது உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். யாரோ சிலரால் அந்த போஸ்டர் போலியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் பிரபலமாகும் போது தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இப்படியான செயல்களை சிலர் செய்து வருகின்றனர்.

இந்த போஸ்டருக்கும் எங்கள் படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெளிவுபடுத்தியுள்ளார். இந்த படத்தை பொருத்தவரைக்கும் அந்தப் பகுதி மக்களின் தெய்வ வழிபாட்டை சித்தரிக்கும் படம் என்பதால் இது ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என பலரும் யோசித்து வந்தனர். அதற்கு இப்போது படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் இந்த விளக்கம் அவர்களுக்கு ஒரு தெளிவை கொடுத்துள்ளது.

Published by
ராம் சுதன்