கன்னட சினிமா நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியான திரைப்படம் Kantara கர்நாடக மலைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி மக்களின் காவல் தெய்வம், அவர்களின் வாழ்க்கை முறை, காதல் உள்ளிட்ட பல விஷயங்களை இப்படம் பேசி இருந்தது. இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று அதிக வசூலை பெற்றது.
இதை ரிஷப் ஷெட்டியே எதிர்பார்க்கவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் இப்படம் நல்ல வசூலைப் பெறவே வசூலை பெற்றது குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் 400 கோடி வரை வசூலை பெற்றது. இப்படம் ஹிட் அடிக்கவே தற்போது kantara chapter 1 என்கிற படத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
இந்தப் படத்தில் மதராஸி பட புகழ் நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் கூட நேற்று வெளியானது. வருகிற அக்டோபர் 2ம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. ஒருபக்கம், டிரெய்லரை பார்த்த பலருக்கும் முதல் பாகம் போல் இந்த படம் இருக்குமா என்பது சந்தேகம் வந்திருக்கிறது.
ஏனெனில் இதில் புதிதாக வேறு ஏதோ ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். இது இந்த படத்தின் வியாபாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்படத்தின் விநியோக உரிமை சுமார் 36 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. வினியோக உரிமையை பலரிடமும் பிரித்து கொடுத்திருக்கிறார்கள். போட்ட முதலை எடுக்க வேண்டும் எனில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 72 கோடி வசூல் செய்ய வேண்டும். 80 கோடி வசூல் செய்தால்தான் போட்ட பணத்திற்கான வட்டியையும் சேர்த்து கட்டமுடியும்.
80 கோடிக்கும் மேல் வசூல் செய்தால்தான் இப்படத்தை வெளியிட்டவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், தமிழில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களே அவ்வளவு வசூல் செய்வது இல்லை. அதோடு, படத்தின் டிரெய்லரை பார்த்த விநியோகஸ்தர்களுக்கு படத்தின் மீது சந்தேகம் வந்திருக்கிறது. நஷ்டமாகிவிட்டால் என்னாவது என்கிற கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…