சிவக்குமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. சூர்யா நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் சாக்லேட் பாயாக சில படங்களில் நடித்தார். பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. கௌதம் மேனன் இயக்கத்தில் பக்கா ஆக்சன் ஹீரோவாக நடித்த காக்க காக்க திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கியது.
பாலாவின் இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய 2 படங்களும் சூர்யாவுக்கு கை கொடுக்க ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஒருபக்கம், அவரின் தம்பி கார்த்தி பருத்திவீரன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் பையா படமும் வெற்றி. எனவே, தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். ஜப்பான் அவரின் 25வது திரைப்படமாகும். இப்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். அண்ணன் சிங்கம் படத்தில் நடித்தால் கார்த்தி சிறுத்தையாக வந்து மிரட்டினார்.
ஆனால், இத்தனை வருடம் ஆகியும் அண்ணன் – தம்பி இருவரும் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பில் பலமுறை இந்த கேள்வி கேட்கப்பட்டது. நல்ல கதை அமைந்தால் செய்வோம் என இருவரும் சொல்லி வந்தனர். தற்போது அதற்கான நேரம் கசிந்திருக்கிறது.
சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் இறுதியில் ஒரு கேமியோ வேடத்தில் வருகிறாராம் கார்த்தி. சில நிமிட காட்சிகள் என்றாலும் அது சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், கங்குவா படம் 2 பாகங்களாக உருவாகவிருக்கிறது. 2ம் பாகத்தில் சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் அசத்தல் வில்லனாகவும் கார்த்தி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
கங்குவா படத்தில் கார்த்தி நடிக்கவுள்ள காட்சிகள் விரைவில் எடுக்கப்படவுள்ளது. சர்தார் 2 பட இடைவெளியில் கங்குவா படத்தில் கார்த்தி நடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ சூர்யாவும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது அவர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…