Categories: Cinema News latest news

இதனால்தான் பசங்க உங்க மேல பைத்தியமா இருக்காங்க!.. மேடையில் ஓப்பனாக பேசிய கார்த்தி!..

தெலுங்கு சினிமாவில் நடிகர் நாகார்ஜுனன் அவர்களின் மூத்த மகனாக சினிமாவில் அடையாளம் காணப்பட்டவர் நடிகர் நாகசைதன்யா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரால் தனது தந்தையைப் போல ஒரு முன்னணி நடிகராக ஜொலிக்க முடியவில்லை. அதிலும் நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு இவர் நடித்த ஒரு திரைப்படம் கூட ஹிட் கொடுக்கவில்லை அனைத்துமே தோல்வியை சந்தித்தது.

கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது தண்டேல் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் நாகசைய்தன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கார்த்திகேயா 2 என்ற திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். தமிழில் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதற்கு காரணம் நடிகை சாய் பல்லவி.

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். மேலும் சாய் பல்லவியின் லக் இப்படத்தை வெற்றி படமாக மாற்றுமா? என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் தண்டேல் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் பேசிய கார்த்தி கூறியிருந்ததாவது ‘தண்டேல் படத்தில் நாகசைய்தன்யாவின் கதாபாத்திரத்தில் ஒரு அப்பாவித்தனத்தை கவனிக்க முடிகின்றது. சாய்பல்லவி எப்போதும் ஒரு ஸ்பெஷல் தான். ஒரு மிகச்சிறந்த நடிகை. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக இருக்கின்றது.

திரையில் ஒரு ஹீரோவை காதலிக்கின்றது போன்ற சீன் வரும் போது முழு காதலையும் கொட்டி தீர்த்து விடுகிறீர்கள். அதனால் பசங்க அனைவரும் உங்கள் மீது பைத்தியம் பிடித்து திரிகிறார்கள். காதல் மட்டுமல்ல ஒரு வலி மிகுந்த காட்சியாக இருக்கலாம். வயசுக்கு மீறி அனுபவமாக இருக்கலாம். அதை எல்லாம் எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பது தெரியவில்லை.

அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களிடம் பேசினேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நீங்கள் கொடுக்கும் முழு உழைப்பு உங்களை மிகச் சிறந்த நடிகையாக மாற்றி இருக்கின்றது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அது மலர் டீச்சராக இருக்கலாம், இந்துவாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் நீங்கள் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக அளவு உழைப்பை கொடுக்கிறீர்கள்’ என்று பெருமையாக பேசி இருந்தார்.

Published by
ramya suresh